தன்னை விட 46 வயது வித்தியாசம் உள்ள பாட்டியை திருமணம் செய்த இளைஞர்…2 வருடத்தில் விவாகரத்து!
கடந்த 2019 ஆம் ஆண்டில்,ஐரிஸ் ஜோன்ஸ் என்ற 83 வயதான இங்கிலாந்தை சேர்ந்த பாட்டியை திருமணம் செய்த இளைஞர் அவரை விவாகரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐரிஸ் ஜோன்ஸ்க்கு பேஸ்புக் குழுவில் எகிப்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்ற 37 வயது இளைஞைர் அறிமுகம் கிடைத்துள்ளது.இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு,பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஐரிஸ் நவம்பர் 2019 இல் எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு வந்தார்.அங்கு அவர் இப்ராஹிமை சந்தித்தார். மேலும் இவர்கள் காதல் தொடர ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டனர். எகிப்தில் உள்ள ஷர்ம் எல்-ஷேக் நகரில் தேனிலவும் கொண்டாடினர்.
இந்நிலையில் இவர்களின் திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.இப்படி ஒரு காதலா என்று அனைவரும் வியந்தனர்.இதனை தொடர்ந்து ஐரிஸ் மற்றும் இப்ராஹிமின் திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் சுமுகமாக சென்றது,ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தனர்.
இந்த அதிர்ச்சி தகவலை ஐரிஸ் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.இப்ராஹிமை தாம் விரும்புவதாகவும் ஆனால்.. தங்கள் உறவு சில காலமாக கடினமாகி வருவதாகவும்.. காதலித்தாலும் ஏதோ ஒரு விஷயத்துக்காக சண்டை போட்டுக் கொள்வதாகவும், இத்துடன்.. பிரிவதே நல்லது என நினைத்து விவாகரத்து செய்து விட்டதாக கூறி உள்ளார்.மேலும் இந்த வலியில் இருந்து மீள்வதற்காக தான் ஒரு பூனையை வளர்த்து வருவதாகவும்,1993 ஆம் ஆண்டு தனது முதல் கணவரை விவாகரத்து செய்ததாகவும்,26 ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.