ஏவுகணை நாயகன் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள்; முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி !!

0
68

ஏவுகணை நாயகன் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள்; முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி

 

அப்துல் கலாம் ஒரு இந்திய விண்வெளி விஞ்ஞானி ஆவார்.இந்தியாவின் அக்னி,பிருத்வி ஏவுகணைகளின் வளர்ச்சி மற்றும் அதன் செயல்பாட்டிற்க்கு காரணமாக இருந்தார்.பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை வாகன தொழில் நுட்பத்தின் திருப்புமுனை வளர்ச்சிக்காக இவருக்கு ‘ஏவுகணை நாயகன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.மேலும் இவர் ஒரு சிறந்த ஆசிரியர்,விஞ்ஞானி மற்றும் ‘மக்கள் ஜனாதிபதி’ போன்ற பல்வேறு துறைகளில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

 

A.P.J. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் ஜூலை 27 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் ஏவுகணை நாயகன் 2015 ஆம் ஆண்டு ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் விரிவுரை ஆற்றிக்கொண்டிருக்கும் போது இந்த நாளில் தனது இறுதி மூச்சைப் பெற்றார்.

 

இந்நிலையில் ஒ.பன்னீர் செல்வம் தன் டுவிட்டரில் பதிவிட்டு நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

“இந்திய நாட்டின் தென்கோடியில் எளிமையான குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய தொழில்நுட்ப அறிவால் வளர்ச்சியடைந்து, வளமான இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டவரும், இந்திய குடியரசத் தலைவர் பதவியை வகித்தவருமான ‘பாரத ரத்னா’டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

அவரது நினைவு நாளான இன்று “கனவு, கனவு, கனவு, இதனை சிந்தனை வடிவமாக்குங்கள், பின் செயலாற்ற முனைப்படுங்கள்” என்ற அவரது அறிவுரையை பின்பற்ற உறுதி ஏற்போம்!”

என அதில் தெரிவித்துள்ளார்.