அமலாக்கத்துறையினரும் இதை செய்யலாம்!! அதற்கு அதிகாரம் உண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி!!

0
30
Enforcement can do this too!! The Supreme Court has the power to act!!
Enforcement can do this too!! The Supreme Court has the power to act!!

அமலாக்கத்துறையினரும் இதை செய்யலாம்!! அதற்கு அதிகாரம் உண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி!! 

ஒருவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்குமாறு அவரது மனைவி மேகலா சென்னை ஹை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்து ஐகோர்ட் நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது தான். நீதிமன்ற காவல் சட்டப்படியானது. எனவே ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காலத்தை எல்லாம் நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது எனவும் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி அவரது மனைவி மேகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு தற்போது விசாரணை செய்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகலில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில் அமலாக்கத்துறைக்கு கைது செய்யும் அதிகாரம் உள்ளது. மேலும் அதிகமான தரவுகள் பெறவே விசாரணை முகமைகள் கைது செய்வதாகவும் நீதிபதிகள் தங்களது கருத்தில் இன்று தெரிவித்தனர்.