இன்று முதல் வீடு தேடி வரும் 1000 ரூபாய் டோக்கன்!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்ல் அறிவித்திருந்தார். அதில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பார் என்றும் இதற்காக 7,000 கோடி ஒதுக்கப்பட்டுளதாக அறிவித்திருந்தார்.
தமிக அரசு கடந்த மாதம் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. மேலும் அந்த உரிமை தொகையை அனைவருக்கும் வழங்காமல் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த 1000 ரூபாயை கலைஞர் பெயரில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் அதற்கு விண்ணபிக்க சிறப்பு முகாம் அந்தந்த பகுதிகளில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து அதற்கு ஒரு புதிய செயலியை அறிமுகபடுத்தியது. ஆனால் அந்த செயலி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கிடையாது என்று அறிவித்திருந்தது. இது குறித்து தன்னார்வலர்களுக்கு மட்டும் பயற்சி அளிக்கப்பட்டது.
மேலும் இதற்கான விண்ணப்பிக்கும் பணி அனைத்து மாவட்டங்களில் வேகமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிறை முறைகேடாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதனால் இது குறித்து விளக்கமளிக்கும் வரை மகளிர் உதவி தொகை 1000 ரூபாய்க்கான விண்ணபங்கள் வழங்குவது தற்காலிமாக நிறுத்தம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்ய உள்ளார்கள். மேலும் டோக்கன் விநோயகம் செய்யும்போது, வீட்டில் ஆட்கள் இல்லை என்றால் அவரிகளின் விவரங்களை குறித்து வைக்க வேண்டும். மேலும் தமிழக அரசு ஒரு நாளைக்கு 60 % விண்ணபங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.