ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்!!
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை பயன்படுத்தி வருகின்றன்னர்.
இவ்வாறு சாமானிய மக்கள் அதிக அளவில் ரயில் பயணம் செய்து வருகின்றனர். இதில் வழங்கப்படும் குறைவான விலை டிக்கேட்களால் கோடி கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.இது ஏராளமான பொதுமக்களுக்கு மிகவும் சவுகரியமாக அமைகின்றது.
இந்த நிலையில் சில ரயில்கள் பராமரிப்பு பணிக்காக அடிக்கடி ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்று. மேலும் அடிக்கடி ரயில் ரத்து செய்யவடுவதால் பொதுமக்கள் பலர் இன்னல்களை சந்திக்கின்றனர். பண்டிகை காலங்களில் தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு வசத்திய இருக்க வெளி ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில் சேவையை இயக்கிவருகிறது.
அதனை தொடர்ந்து தீபவாளி , பொங்கல், ராம்ராஜன் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில் சேவை வசதியை பொதுமக்களுக்காக தமிழக அரசு ஏற்படுத்தி தருகிறது . அதனையடுத்து தற்போது தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த தகவளின் படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசி வாராணசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரைக்கான தென்காசியில் இருந்து பாரத் கெளரவ் சிறப்பு ரயில் நவம்பர் 9 ஆம் தேதி புறப்பட்டு நவம்பர் 11 ஆம் தேதி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மறுவழியாக வாராணசியிலிருந்து நவம்பவர் 13 ஆம் தேதி புறப்பட்டு தென்காசியை 17 ஆம் தேதி வந்தடையும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சிறப்பு ரயில் சிவசாசி, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், விழுப்புரம், செங்கல்பட்டு தாம்பரம், சென்னை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.