சர்வதேச “புக்கர்” பரிசு இறுதி சுற்றில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளரின் நாவல்!!

சர்வதேச “புக்கர்” பரிசு இறுதி சுற்றில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளரின் நாவல்!!

 

எழுத்தாளர்களை கௌரவிக்க அவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது ‘புக்கர்’.

இந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான புக்கரை பெறுவதற்காக உலகின் ஒட்டு மொத்த ஆங்கில நாவல்களும் போட்டியிட்டபோது 13 நாவல்கள் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

அந்தவகையில் பரிசு பெறுவதற்கான இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நாவல்களில் ஒன்றான ‘வெஸ்டர்ன் லேன்’ என்கின்ற ஆங்கில நாவலை இந்திய வம்சாவளி பெண் ‘சேத்னா மாரூ’ என்பவர் எழுதியுள்ளார்.

 

 

வெஸ்டர்ன் லேன் நாவல் கதை சுருக்கம்

 

11 வயது கோபி என்ற சிறுமியை மையமாக வைத்து கதை நகர்கின்றது.கோபியின் தாய் இறந்துவிட அவளது தந்தை அவளை ஒரு மிருகத்தனமான விளையாட்டில் சேர்த்து விடுகிறார்,பின்னாளில் ஸ்குவாஷ் விளையாட்டே அவளது உலகமாகின்றது.இதனால் அவள் மெதுவாக அவளது சகோதரிகளை பிரிந்து தனியாக வாழ்கிறாள்.இவ்வாறு விளையாட்டு,குடும்பம் என்று சிறுமியின் அப்பாவி தனத்திற்கும்,சகோதரிகளின் நெருக்கத்திற்குமான கதையாக ‘வெஸ்டர்ன் லேன்’ நாவலை எழுத்தாளர் சேத்னா மாரூ எழுதி கடந்த பிப்ரவரி மாதம் 7 அன்று வெளியிட்டார்.மேலும் இந்நாவல் இவரின் முதல் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.