செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள்… விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்!!

0
247

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள்… விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்…

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வந்த வீடுகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்துள்ளார்.

 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் சில இருளர் இன மக்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்கு ரோட்டரி சென்ட்ரல் சார்பாக குயில் குப்பம் கிராமத்தில் தனியாக 63 வீடுகள் கட்டப்பட்டு வந்தது.

 

இருளர் இன மக்கள் பயன் அடையும் வகையில் 7.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த 63 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இருளர் இன மக்கள் பயன் அடையும் விதத்தில் இன்று(ஆகஸ்ட்2) விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். மேலும் இந்த வீடுகளை திறந்து வைக்கும் பொழுது எடுத்த புகைப்படங்களை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருளர் இன மக்களுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் ஒன்றியத்தில் வசித்து வரும் இருளர் பழங்குடியின மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்த ரோட்டரி சென்ட்ரல் சார்பாக 7.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குயில்குப்பம் கிராமத்தில் 63 வீடுகள் கட்டப்பட்டன. அந்த வீடுகளை திறந்து வைத்து பயனாளிகள் வசம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் இன்று பங்கு பெற்று மகிழ்ந்தோம். தங்களது கனவு இல்லங்களை பெற்ற இருளர் இன மக்களுக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Previous articleபூனைக்குட்டி புலியாக மாறிய கதை… ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!!
Next articleஒரே நாளில் தொண்டை கரகரப்பு நீங்க எளிமையான வீட்டு வைத்தியம்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!