ஒரே நாளில் தொண்டை கரகரப்பு நீங்க எளிமையான வீட்டு வைத்தியம்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

0
127

ஒரே நாளில் தொண்டை கரகரப்பு நீங்க எளிமையான வீட்டு வைத்தியம்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

தொண்டை கரகரப்பை சரி செய்யக்கூடிய இயற்கையான வீட்டு வைத்திய முறையை ஒவ்வொன்றாக இங்கு தெரிந்து கொள்வோம். அதாவது தொண்டை பகுதிகளில் ஏற்படும் ஒரு விதமான வலி மற்றும் எரிச்சலை தான் தொண்டை கரகரப்பு என்று சொல்கிறோம்.

பருவகால மாற்றத்தின் போது ஏற்படக்கூடிய இந்த பிரச்சனையை சமாளிப்பதற்காக ஏராளமானோர் மருத்துவர்களிடம் சென்று மருந்து மாத்திரைகளை உண்டு வருவார்கள். இதனால் பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படும் எனவே இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் வீட்டிலேயே இதற்கு ஒரு வைத்தியம் தயாரிப்பது பற்றி இங்கு பார்ப்போம்.

1. உப்பு கரைசல்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து வாயை கொப்பளித்து வந்தால் தொண்டை வலி மற்றும் தொண்டை கரகரப்பு உடனடியாக சரியாகும்.

2. தண்ணீர்
உடலுக்கு தேவையான தண்ணீரை நாம் பருகாமல் இருக்கும் போதும் இந்த தொண்டை கரகரப்பு பிரச்சனை ஏற்படுகிறது. எனவே நாள்தோறும் எட்டில் இருந்து பத்து கிளாஸ் அளவு தண்ணீரை தேவையான இடைவெளியின் போது குடித்து வர தொண்டை கரகரப்பு தொண்டை வலி என தொண்டை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

3. நீராவி வைத்தியம்
மார்பில் தங்கி இருக்கக்கூடிய சளியால் கூட நமக்கு தொண்டை கரகரப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி அந்த தண்ணீரில் நொச்சி இலை மற்றும் நீலகிரி இலைகளை சிறிதளவு போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் நெஞ்சில் இருக்கக்கூடிய சளி அனைத்தும் சரியாகி தொண்டை கரகரப்பிலிருந்து விடுபடலாம்.

4. இஞ்சி
ஆன்ட்டி பாக்டீரியல் சத்து கொண்ட இஞ்சி ஆனது தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை வலி ஆகிய பிரச்சினைகளை நீக்கக்கூடிய ஒரு சிறந்த மூலிகையாகும். எனவே இஞ்சியை கொண்டு தயாரிக்க கூடிய டீ மற்றும் கஷாயங்களை குடித்து வந்தால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.

5. சிக்கன் சூப்
சிக்கன் சூப்பில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் அனைத்தும் வறட்டு இருமல் தொண்டை வலி தொண்டை கரகரப்பை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. குறிப்பாக நாட்டுக்கோழி வைத்து சூப் செய்து குடிப்பது உடலை நன்கு வலிமைப்படுத்தும்.

6. ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு கிளாஸ் அளவு தண்ணீரில் இரண்டு ஸ்பூன் அளவு ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து வாயை நன்கு கொப்பளித்து வர தொண்டை கரகரப்பு உடனடியாக நீங்கும்
இதை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்து வர உடனடியாக மாற்றம் பெறலாம்.

7. மஞ்சள் பால்
கிருமி நாசினி எதிர்ப்பு பண்பு கொண்ட இந்த மஞ்சள் தூளை வைத்து தயாரிக்க கூடிய மசாலா பாலானது தொண்டை கரகரப்பு தொண்டை வலி தொண்டை எரிச்சல் என அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது. மேலும் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூளை சேர்த்து குடித்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.

8. எலுமிச்சை டீ
அதாவது எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு டீ தூள் மற்றும் தேன் கலந்து சேர்த்து தயாரிக்கப்படுகின்ற எலுமிச்சை தீயானது உடனடியாக தொண்டை கரகரப்பு தொண்டை வலி தொண்டை எரிச்சல் என அனைத்து பிரச்சினைகளையும் நீக்குகிறது.

எனவே இது போன்ற இயற்கையான எளிமையான வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினாலே தொண்டை கரகரப்பு தொண்டை வலி தொண்டை எரிச்சல் நெஞ்சில் சளி என அனைத்து பிரச்சினைகளையும் உடனடியாக வீட்டில் இருந்தபடியே சரி செய்ய முடியும்.

 

author avatar
CineDesk