இனி ட்ராஃபிக் போலீஸ் FINE போட்டால் இப்படி செய்யுங்கள்!!
நாம் வண்டியில் சாலைகளில் செல்லும்போது போக்குவரத்து காவல்துறையினரிடம் ஏதேனும் ஒரு குற்றத்தால் மாட்டிக் கொள்கிறோம் என்றால் அதற்காக நமக்கு அபராதம் விதிப்பார்கள். அதை ஆன்லைனில் கட்டிக் கொள்கிறோம் என்று அதற்காக சலானை வாங்கி செல்வார்கள்.
சலானை வாங்கி சென்று விட்டு ஆன்லைனில் பணத்தை கட்டினாலும் கட்டாமல் விட்டாலும் அவர்களுக்கு தெரியவா போகிறது என்று ஆணவத்தில் ஏராளமானோர் இந்த அபராத தொகையை கட்டாமல் போகிறார்கள். ஆனால் அவ்வாறு ஏமாற்ற முடியாது அதற்கும் போக்குவரத்தில் ஒரு சட்டம் இருக்கிறது எனவே யாராலும் அதை கட்டாமல் ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அபராத தொகை விரித்து சலான் வழங்குவது சில பேருக்கு தவறுதலாகவும் வந்து விடுகிறது. அதாவது ஒருவர் வண்டியில் வெளியே போகாமலேயே அவரின் தொலைபேசி எண்ணிற்கு அபராத தொகை விரித்து சலான் வந்திருக்கக்கூடும். இதுபோன்று சூழ்நிலைகளில் தவறுதலாக வந்த இந்த சலானை நம்மால் ரத்து செய்ய முடியும்.
அதற்கு முதலில் e.challan.parivahan.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அதில் கம்ப்ளைன்ட் குள் சென்று முகவரிகளை கொடுத்து என்ன பிரச்சனை என்பதை அதில் பதிவு செய்ய வேண்டும். இதையெல்லாம் முடித்துவிட்டு சப்மிட் கொடுத்தால் நமக்கு ஒரு கம்ப்ளைன்ட் எண் வந்துவிடும்.
பிறகு செக் ஸ்டேட்டஸ் என்பதை கிளிக் செய்து அதனுள் நமக்கு வந்திருக்கக் கூடிய எண்ணை பதிவு செய்து நாம் தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றால் கமிஷனர் அலுவலகத்திற்கு இதைப்பற்றி ஒரு கடிதம் எழுதி அனுப்பினாலே இந்த சலான் ரத்து ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இதுபோன்ற செல்லங்களை கட்டாமல் விட்டால் என்னவாகும் என்பதை பார்ப்போம். இந்த போக்குவரத்து சலாம் களுக்கு எந்த ஒரு இறுதி தேதியோ கிடையாது ஆனால் ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கு மேல் கட்டாமல் விட்டால் நமக்கு அரசிடம் இருந்து ஒரு கடிதம் வரும் அதற்கு பின்பும் நாம் கட்டாமல் இருந்தால் நம்மை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதுபோல போக்குவரத்து அபராத தொகையை கட்டாமல் இருப்பவர்களின் தொகை மதிப்பை ஆர் டி ஓ தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி 2019 ஆம் ஆண்டு 8 கோடி, 2020 ஆம் ஆண்டு 16 கோடி, 2021 ஆம் ஆண்டு 29 கோடி மற்றும் 2022 ஆம் ஆண்டு 19 கோடி என இவ்வளவு போக்குவரத்து அபராத தொகை மீதம் உள்ளது.