சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா… இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்…
டல்லாக இருக்கும் சருமத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு வெறும் மூன்று பொருள்களை மட்டும் பயன்படுத்தி எவ்வாறு பளபளப்பா வைத்துக் கொள்ள மருத்துவ முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
நம்மில் சிலருக்கு குறிப்பாக பெண்கள் பலருக்கும் முகம் பளபளப்பாக இல்லாமல் இருக்கும். சருமம் வறண்டு டல்லாக காணப்படும். இதை சரி செய்வதற்கு நாம் பல கிரீம்களை பயன்படுத்தி இருப்போம். பலவித எண்ணெய் வகைகளை பயன்படுத்தி இருப்போம். ஆனால் எல்லாம் தற்காலிக பயனை கொடுத்திருக்கும். சில நாட்கள் கழித்து மீண்டும் சருமத்தின் அதாவது முகத்தின் பளபளப்பு குறைந்திருக்கும். இதை சரிசெய்ய அதாவது முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள எவ்வாறு மருந்து தயாரித்து அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்…
* மைதா மாவு
* மஞ்சள் தூள்
* தேன்
மருந்தை தயார் செய்யும் முறை…
முதலில் ஒரு சிறிய பவுலில் மஞ்சள் தூள் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் அரை ஸ்பூன் அளவு மைதா மாவு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மைதா மாவுடன் சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். முகத்தை பளபளப்பாக மாற்றும் இயற்கை மருந்து தயாராகி விட்டது.
இதை பயன்படுத்தும் முறை…
தயாரித்து வைத்துள்ள மஞ்சள்தூள் மைதா கலவையை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளவும். 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து முகத்தையும் கழுத்தையும் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.
அவ்வாறு இந்த கலவையை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் கழுத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும். அழுக்குகள் நீங்கிவிடுவதால் முகம் பளபளப்பாக மாறி விடும்.
இது மட்டுமில்லாமல் ஒரு சிறிய பவுலில் ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் எடுத்து அதனுடன் சிறிதளவு சந்தனப்பொடி சேர்த்து தயிர் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து பின்னர் கழுவினால் முகம் பளபளப்பு அடையும்.