கரடு முரடாக இருக்கும் பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா… அப்போ இதை டிரை பண்ணுங்க…
பெண்களில் பலருக்கும் கரடுமுரடான பாதங்கள் இருக்கும். அவ்வாறு கரடு முரடான பாதங்களை மென்மையாக மாற்றுவதற்கு என்ன வைத்தியம் செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் பலருக்கு பாதங்களில் வெடிப்புகள் இருக்கும். பாதங்கள் இரண்டும் கரடு முரடாக இருக்கும். இந்த பாதங்களை மென்மையாக்க பலவிதமான ஆயில்மென்ட்களை பயன்படுத்தி இருப்பார்கள். மேலும் ஒரு சிலர் அக்கு பஞ்சர் சிகிச்சைகள் எடுத்துக் கொள்வார்கள். மேலும் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் நல்லது என்று ஒரு சிலரின் அறிவுரையை கேட்டு அதன்படி மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அந்த வழிமுறைகள் அனைத்தும் பயன் இல்லாமல் போகும்.
இந்த பதிவில் வெறும் இரண்டு பொருள்களை மட்டும் வைத்து பாதங்களை மென்மையாக மாற்றுவது எவ்வாறு என்று இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்வோம்.
இதை செய்ய தேவையான பொருள்கள்…
* பாதாம் ஆயில்
* கல் உப்பு
இதை செய்யும் முறை…
முதலில் ஒரு பிளாஸ்டிக் டப்பில் அல்லது ஒரு பெரிய பாத்திரத்தில் அதாவது இரண்டு பாதங்களும் கொள்ளும் அளவு உடைய பாத்திரத்தில் வெந்நீர் நிரப்பிக் கொள்ளவும்.
பிறகு இதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் ஒரு ஸ்பூன் பாதாம் ஆயிலையும் இதில் சேர்த்துக் கொள்ளவும். பாதங்களை மென்மையாக்கும் மருந்து தயாராகி விட்டது.
பயன்படுத்தும் முறை…
பாதங்களை மென்மையாக்கும் மருந்து தயாராகி விட்டது. பின்னர் இந்த கல் உப்பு பாதாம் ஆயில் கலந்த வெந்நீர் டப்புக்குள்(அ) பாத்திரத்திற்குள் இரண்டு பாதங்களையும் வைக்க வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் இந்த பாத்திரத்திற்குள் இரண்டு பாதங்களையும் வைக்க வேண்டும்.
இதனால் பாதங்களில் இறந்த சரும செல்கள் உதிர்ந்து பாதங்களில் இயற்கையான ஈரப்பதம் உருவாகும். இதனால் பாதங்கள் மென்மையாக மாறும்.
கால்களில் நகங்கள் உடைந்து வெடிப்பும் கீறலுமாக இருந்தால் காய்ச்சி ஆறவைக்கப்பட்ட பாலில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அந்த வெடிப்பு கீறல் உள்ள இடங்களில் பூசினால் அந்த பாதிப்புகள் குணமடைந்து பாதங்கள் மென்மையாகவும் மாறும்.