முகத்தில் துளைகள் இருக்கின்றதா… அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று பாருங்கள்!!

0
79

 

முகத்தில் துளைகள் இருக்கின்றதா… அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று பாருங்கள்…

 

நம்மில் பலர் முகங்களில் சிறிது சிறிதாக துளைகள் இருக்கும். இந்த துளைகளை எவ்வாறு சரி செய்வது அதற்கு என்ன மருந்து தயார் செய்வது எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

நம்மில் பலருக்கு முகத்தில் மருக்கள் உருவாகும். இந்த மருக்கள் ஆறும் வரை அப்படியே விட்டால் எந்தவொரு பிரச்சனையும் இருக்காது. அவ்வாறு இல்லாமல் அதை நாமே எடுத்துவிட்டால் இந்த மருக்கள் நம் முகத்தில் துளைகளை ஏற்படுத்தும்.

 

இந்த துளைகளை சரி செய்வதற்கு நாம் தனியாக மருத்துவம் செய்ய வேண்டும். பல மருந்துகள், கிரீம்கள், ஆயில்கள் என பெரிய அளவில் மருந்துகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதை பயன்படுத்துவதற்கு மாற்றாக இயற்கை மருத்துவ முறையில் ஒரு சில பொருள்களை மட்டும் பயன்படுத்தி எந்தவொரு பக்க விளைவும் இல்லாமல் முகத்தில் உள்ள துளைகளை குணப்படுத்துவது பற்றி பார்க்கலாம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* எலுமிச்சை சாறு

* சர்க்கரை

* தேன்

 

இதை தயார் செய்யும் முறை…

 

முதலில் ஒரு சிறிய பவுலை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் கால் ஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதில் ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து கொள்ளவும். இவை மூன்றையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். முகத்தில் உள்ள துளைகளை குணப்படுத்தும் இயற்கை மருந்து தயார்.

 

இந்த மருந்தை பயன்படுத்தும் முறை…

 

தயார் செய்து வைத்துள்ள இந்த மருந்தை முகத்தில் துளைகள் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். பின்னர் 15 நிமிடம் முகத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்த பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடல வேண்டும்.

 

இவ்வாறு செய்வதால் சருமத் துளைகளுக்குள் அடைத்துக் கொண்டிருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். மேலும் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறும். இதனால் முகத்தில் உள்ள துளைகள் குணமாகும். மேலும் சருமம் பளபளப்பாகும்.

 

Previous articleபொடுகு பிரச்சனை நீங்கி அடர்த்தியாக வளர உடனடி தீர்வு!! 
Next articleகரடு முரடாக இருக்கும் பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா… அப்போ இதை டிரை பண்ணுங்க…