குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!! ஆகஸ்ட் 15 ஆம் தேதி உதவித்தொகை வெளியான தகவல்!!
அனைத்து மாநில அரசுகளும் பெண்களுக்கு பல திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெண்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் பெண்களுக்கு உதவும் வகையில் பிறப்பதற்கு முன்பு கருவாக இருப்பதில் தொடங்கி, முதியோர் ஆகும் வரை பெண்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றி அறிவித்திருந்தார். அந்த உதவித்தொகை செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பார் என்றும் இதற்காக 7,000 கோடி ஒதுக்கப்பட்டுளதாக அறிவித்திருந்தார்.
தமிழக அரசு கடந்த மாதம் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. இந்த 1000 ரூபாயை கலைஞர் பெயரில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கர்நாடக மாநில அரசும் குடும்ப தலைவிக்கு உதவி தொகை வழங்க உள்ளதாக தகவல் வெளிவந்து.
இந்த நிலையில் மாதம் தோறும் குடும்ப தலைவிக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது வருன்கிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 2000 ரூபாய் உதவி தொகை வழங்கம் திட்டம் அமலுக்கு வர உள்ளது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த உதவி தொகை ஆகஸ்ட் 15 முதல் 20 தேதிக்குள் பெண்களின் வங்கியில் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் 1.30 கோடி பெண்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.