எனது மகளின் இதயத்தில் இரண்டு ஓட்டைகள் உள்ளது… விஜய் பட நடிகை உருக்கமாக அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

 

எனது மகளின் இதயத்தில் இரண்டு ஓட்டைகள் உள்ளது… விஜய் பட நடிகை உருக்கமாக அறிவிப்பு…

 

நடிகர் விஜய் நடித்த சச்சின் படத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது மகளின் இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பதாக உருக்கமாக கண்ணீர் விட்டு பேசியுள்ளார.

 

நடாகர் விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆன திரைப்படம் சச்சின். இந்த திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிகை பிபாஷா பாசு அவர்கள் நடித்துள்ளார். நடிகை பிபாஷா பாசு அவர்கள் சச்சின் திரைப்படத்தில் மஞ்சு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

 

நடிகை பிபாஷா பாசு அவர்கள் கடந்த 2016ம் ஆண்டு பிரபல நடிகர் கரண்சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடந்த வருடம் அதாவது 2022வது வருடம் இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு தேவி என்று பெயர் வைத்தனர். இந்த நிலையில் தனது மகள் தேவிக்கு இதயத்தில் இருக்கும் பிரச்சனை பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.

 

நடிகை பிபாஷா அவர்கள் இது தொடர்பாக “எங்கள் குழந்தை தேவி பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையின் இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதயத்தில் இருக்கும் ஓட்டைகள் தானாக சரியாகின்றதா என்று அடிக்கடி ஸ்கேன் எடுத்து பார்க்க மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் இதயத்தில் ஓட்டை பெரிய அளவில் இருந்தது.

 

குழந்தைக்கு மூன்று மாதங்கள் ஆகும் பொழுது ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் நான் எனது குழந்தையின் எதிர் காலத்திற்காக அறுவை சிகிச்சை செய்வதற்காக ஒப்புக் கொண்டேன்.

 

ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியில் 6 மணி நேரம் இருந்தோம். அந்த 6 மணி நேரம் என் வாழ்க்கையே நின்றுவிட்டது போல இருந்தது. ஆனால் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. எங்கள் குழந்தை தேவி தற்பொழுது நலமாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.