இரண்டாவது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி… சோகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்…

0
63

 

இரண்டாவது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி… சோகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்…

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் சோகத்தின் உச்சத்தில் உள்ளனர்.

 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நேற்று(ஆகஸ்ட்6) கைனாவில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

இதையடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா அரைசதம் அடித்து 51 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷன் 27 ரன்களும், ஹர்திக் பாண்டியா 24 ரன்களும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் பந்துவீச்சில் ரொமாரியோ ஷேப்பர்ட், அல்சாரி ஜோசப், அகீல் ஹூசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

இதையடுத்து 153 ரன்களை இலக்காகக் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரண்டன் கிங் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க அதன் பின்னர் களமிறங்கிய சார்லஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மெயர்ஸ் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இணைந்த ரோமன் போவல், நிக்கோலஸ் பூரன் இருவரும் நிதானமாக விளையாடத் தோடங்கினர். நிதானமாக விளையாடிய ரோமன் போவல் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய நிக்கோலஸ் பூரன் அரைசதம் அடித்து 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சிம்ரான் ஹிட்மயர் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க இறுதியில் வெற்றிக்கு தேவைப்பட்ட ரன்களை அகில் ஹூசைன் அவர்களும் அல்சாரி ஜோசப் அவர்களும் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை பெற்று தந்தனர்.

 

அகில் ஹூசைன் 16 ரன்களும், அல்சாரி ஜோசப் 10 ரன்களும் எடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றா பெற்றது. இறுதி வரை இந்திய அணியின் வெற்றிக்காக இந்திய பந்துவீச்சாளர்கள் போராடினர். இந்திய அணியின் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், சஹல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முகேஷ் குமார், அர்ஷதீப் ஷிங் இருவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இருந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது டி20 போட்டியை வென்றது.

 

2 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இரண்டாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடாமல் தோல்வி பெற்றதை அடுத்து இந்திய அணியின் ரசிகர்கள் அனைவரும் சோகத்தின் உச்சத்தில் உள்ளனர்.