இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்ற சிதம்பரத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

0
134

சிதம்பரத்திலிருந்து டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை பற்றிய அடையாளம் தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் எடத்தெரு வைத்த தெருவைச் சேர்ந்த சாஜுதீன் மற்றும் இருவர் டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவரகளது வீட்டில் இருவர் தனிமை படுத்தப்பட்டிருந்தனர், இதில் தாஜுதீன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிதம்பரம் எடத் தெருவைச் சேர்ந்த முகமது சாதிக் என்பவரின் மகன் சாஜ்தீன் வயது 35 மற்றும் அவரது உறவினர்கள் இருவர்  டெல்லியில் நடைபெற்ற  மாநாட்டிற்கு சென்று வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த  சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், மற்றும் சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,  சாஜுதீனை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்று அவரது ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகிறது.

இவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று ஆய்வு செய்வதற்காக, ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மனையில் நடைபெற்றது. மேலும் சாஜுதீன் வீட்டில் உறவினர்கள் இருவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர், இதனால் எடத்தெரு  பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனையடுத்து எடத்தெரு, வாணக்கார தெரு, தொப்பையன் தெரு, தாகம் தீர்த்த பிள்ளையார் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, மசூதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதே போல பரங்கிப்பேட்டை மற்றும் பி.முட்லூர் பகுதிகளிலும் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதால் இந்த பகுதிகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous articleநாளை முதல் குடும்ப அட்டைக்கான 1000 ரூபாய் வழங்கப்படும்! -தமிழக அரசு
Next articleசமையல் எரிவாயு விலை திடீர் குறைவு..!!