காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட் -சபாநயகர் அதிரடி!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது கடந்த மூன்று நாட்களாக மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று மூன்றாவது நாள் விவாதத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்து பேசினார்.எதிர்க்கட்சி தரப்பில் எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினர்.இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவையில் பேச தொடங்கினார்.தாங்கள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் பிரதமர் மோடி அவர்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.மேலும் மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தோம் என்று பேசினார்.இதை தொடர்ந்து மகாபாரதத்தில் வரும் மன்னன் திருதராஷ்டிரன் தான் பிரதமர் மோடி என்றார்.மேலும் குருடனான திருதராஷ்டிரன் மன்னனாக இருந்தபொழுது திரௌபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டன. இதேபோல் நம் அரசனும் குருடனாக அமர்ந்திருக்கிறார் என்று பிரதமர் மோடி மற்றும் மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை இவற்றை மகாபாரதத்துடன் ஒப்பிட்டு பேசினார்.இந்நிலையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை காட்டினர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்படும் சூழல் நிலவியது.
இந்நிலையில் விவாதம் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று மாலை 5 மணிக்கு மேல் பிரதமர் மோடி நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளிக்க தொடங்கினார்.
எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக அரசிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.இதனை தொடர்ந்து அந்த ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதற்கு முந்தைய தேர்தலில் பெற்றிருந்த இடங்களை கூட எதிர்கட்சிகளால் பெற முடியாமல் போனது.மேலும் மக்கள் தங்கள் அரசு மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.மேலும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக நினைக்கின்றேன் என்றார். இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் நாட்டின் வளரச்சி மீதும் நாட்டு மக்களின் மீதும் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை.மேலும் ஆட்சியை பிடிப்பதில் தான் அவர்களுக்கு அக்கறை.அதில் தான் அவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.இவ்வாறு எதிரிக்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசினார்.
இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் பேசாததால் தாங்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து பேசுங்கள் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்ப தொடங்கினர்.இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசாததை கண்டித்து பிரதமர் மோடி உரையாற்றி கொண்டிருந்த பொழுது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மோடி அவர்கள் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினார்.இதனை தொடர்ந்து அவையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இந்நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏற்கனவே அவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்ட நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக குரல் எழும்பவில்லை.இதனை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்து விட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.இதனை தொடர்ந்து மக்களவையில் பொய்யான வாதத்தை முன்னெடுத்து பேசி வரும் காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவர்கள் அவையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்.பி.க்கள் உரையாற்றும் பொழுது தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றார்.மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவையில் பேசி வருகிறார் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி குற்றம் சாட்டினார்.மேலும் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மக்களவை சபாநாயகர் அறிவித்தார்.