யு.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு 25000 உதவித் தொகை வழங்கும் திட்டம்… தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணபிக்கலாம் என்று அறிவிப்பு!!

0
68

 

யு.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு 25000 உதவித் தொகை வழங்கும் திட்டம்… தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணபிக்கலாம் என்று அறிவிப்பு…

 

யு.பி.எஸ்.சி தேர்வு எழுதும் நபர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 25000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் தமிழக மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 

இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்ட நடவடிக்கையாக யு.பி.எஸ்.சி தேர்வு எழுதும் நபர்கள் 25000 ரூபாய் உதவித் தொகை பெற்றுக் கொள்ளலாம் என்று ஏற்கறவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் 25000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு இன்று(ஆகஸ்ட் 11) முதல் யு.பி.எஸ்.சி எழுதும் நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் இந்திய ஆட்சி பணிகளுக்கு தேர்வாக வேண்டும் என்பதில் பல முன் முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகின்றது. அதில் ஒன்றுதான் இந்த நான் முதல்வன் திட்டம். இந்த நான் முதல்வன் திட்டத்திற்கு கீழ் யுபிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு தயாராகும் அனைவரும் இந்த ஊக்கத் தொகையை பெற்று பயனப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இளைய தமிழகம் உலகை வெல்லட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

 

இதையடுத்து நான்.முதல்வன்.திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் 25000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு இன்று.முதல் விண்ணப்பிக்கலாம். யுபிஎஸ்சியில் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த அனைவரும் www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 25000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.