திடீர் குஷியில் ப்ளூ சட்டை மாறன்!!

0
85

திடீர் குஷியில் ப்ளூ சட்டை மாறன்

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் “ஜெயிலர்”.

 

இந்தப் படம் வெளியாகும் சில மணிநேரம் முன்பு வரை பிரபல திரைப்பட விமர்சகரும், இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் கடுமையாக இந்த படத்தை விமர்சித்து வந்தார். ட்விட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த படம் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்டு வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் குறித்தும் விமர்சித்து வந்தார். இதை கண்டித்து பல்வேறு ரஜினி ரசிகர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

 

அத்துடன் அவர்களும், பதிலுக்கு ப்ளூ சட்டை மாறன் அவர்களை, சமூக வலைத்தளங்களில் வாட்டி- வதைத்தனர். இதையெல்லாம் ஒருபுறம் இருக்க படம் பார்த்த ப்ளூ சட்டை மாறன் படத்தை புகழ்ந்து தள்ளிவிட்டார். குறிப்பாக படத்தின் இயக்குநர் நெல்சன் அவர்களை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

 

ரஜினி ரசிகர்களை இடமிருந்து லாபகமாக தப்பித்த ப்ளூ சட்டை மாறன் அவர்கள் தற்போது இந்த விவகாரத்தை விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்கள் என்று மாற்றிவிட்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் மட்டும் இல்லாமல் திரையரங்குகளில் நேரடியாகவே ரஜினி ரசிகர்கள்; விஜய் ரசிகர்கள் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

நல்ல படங்களை கூட கழுவி ஊத்துவது படம் பார்க்காமல் ஏதோ தவறு சொல்ல வேண்டும் என்பதற்காக குற்றம் சாட்டுவது, படங்களை பார்க்காமல்  விமர்சனம் செய்து படம் சில இல்லை என்பது, நடிகர்களை உருவகேலி செய்வது

என ப்ளூ சட்டை மாறன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

 

மேலும், ப்ளூ சட்டை மாறன் மீது ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சிம்பு என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களின் ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளனர். ப்ளூ சட்டை மாறன் மிகவும் அரிதாக வருடத்திற்கு ஓரிரு படங்களை மட்டும் தான் நல்லா இருக்கிறது என்று புகழ்ந்து தள்ளுவார்.மற்றபடி 90 சதவீத படங்களை அவர் கடுமையாக சாடுவார், இதுவே அவரது பழக்கம்