மனைவியை கொலை செய்து உடலை மறைத்த கணவன்… பெற்ற மகளை பார்த்துவிட்டு தற்கொலை… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…
தெலுங்கானா மாநிலத்தில் மனைவியை கொன்று உடலை மறைத்து விட்டு பின்னர் விடுதியில் இருக்கும் மகளை பார்த்துவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை அடுத்து தேயநகர் காலனியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் வேலை செய்து வருகிறார். பிரவீன் அவர்களின் மனைவி லாவண்யா டெய்லர் வேலை செய்து வருகிறார். இவர்களின் மகள் கல்யாணி கரீம் நகரில் உள்ள விடுதியில் தங்கி 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
பிரவீன் குடும்பத்தினர் கீழ் தளத்திலும், அவரது பெற்றோர் முதல் தளத்திலும் வசித்து வருகின்றனர். கணவன் பிரவீன் அவர்களுக்கும் மனைவி லாவண்யா அவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதே போல் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பிரவீன் வீட்டின் அருகே இருந்த கல்லை எடுத்து மனைவி லாவண்யாவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் லாவண்யா அவர்களின் மண்டை உடைந்து அதிக ரத்தம் கொட்டியதில் லாவண்யா சிறிது நேரம் கழித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து லாவண்யா அவர்களின் உடலை வீட்டில் இருந்து மறைத்து வைத்து விட்டு கரீம் நகரில் உள்ள விடுதிக்கு வந்தார். பிரவீன் விடுதியில் தங்கி இருந்த மகள் கல்யாணியை சந்தித்து நலம் விசாரித்து வீட்டுக்கு வந்த பிரவீன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தற்கொலை கடிதம் ஒன்று எழுதினார்.
அந்த கடிதத்தில் பிரவீன் அவர்கள் “எங்களுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. எங்களுடைய உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குகள். சடங்குகள் எதுவும் செய்யக்கூடாது. யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம். பிறப்பைப் போல இறப்பும் இயற்கையானது” என்று குறிப்பிட்டார். பின்னர் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நண்பர்கள் பலமுறை கால் செய்தும் பிரவீன் எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர்களின் நண்பர்கள் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்பொது பிரவீன் தூக்குப் போட்ட நிலையிலும் மனைவி லாவண்யா அவர்கள் இரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து பிரவீன் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பிரவீனின் நண்பர்கள் காவல்துறைக்கு புகார் அளித்ததை அடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.