சரும பிரச்சனைகளை தீர்க்கும் வாசனை குளியல் பொடி… எவ்வாறு தயார் செய்வது..?
நமது சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக் கூடிய வாசனை குளியல் பொடியை எவ்வாறு தயார் செய்வது அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
பொதுவாக சருமத்தில் எதாவது பிரச்சனை என்றால் நாம் பல சிகிச்சைகளை எடுத்துக் கொள்வோம். சருமத்திற்கு பலவிதமான எண்ணெய்களை தேய்ப்பது, பல விதமான மருந்து மாத்திரைகளை எடுப்பது, ஆயில்மென்ட், கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவது போல பல வழிமுறைகளை செய்வோம். இந்த பதிவில் சருமத்தை பாதுகாக்க எளிமையான வீட்டு வைத்திய முறையை பற்றி பார்க்கலாம்.
நமது சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு இயற்கை முறையிலான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொடிகளை பயன்படுத்தினால் சருமம் பளபளப்பாகவும், பாதுகாப்புடனும், இருக்கும். மேலும் சருமத்திற்கு பொலிவு தரும். மேலும் இந்த இயற்கை மூலிகைகளால் ஆன இந்த பொடி நமது சருமத்தில் அழுக்குகள், கிருமிகள் தங்காமல் பார்த்துக் கொள்ளும். இயற்கை முறையிலான வாசனை குளியல் பொடியை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* சோம்பு
* வெட்டி வேர்
* சந்தனம்
* கார்போக அரிசி
* பூலான் கிழங்கு
* கஸ்தூரி மஞ்சள்
* பாசிப்பயறு
செய்முறை…
மேற்கூறிய அனைத்து பொருள்களையும் தனித்தனியாக வெயிலில் நன்கு காயவைக்க வேண்டும்.
வெயிலில் காயவைத்த பின்னர் இதை ஒவ்வொன்றாக எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு காற்று புகாத பாட்டிலில் போட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நீங்கள் குளிக்க பயன்படுத்தும் தண்ணீரில் இந்த பொடியை கலந்து குளிக்கலாம். அவ்வாறு குளித்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.
தொடர்ந்து இது போல குளாத்து வந்தால் சொறி, சிரங்கு, படர்தாமரை, வேர்க்குரு, முகப்பரு, கருவளையம், கரும்புள்ளி போன்ற தோல் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
உடலில் வியர்வையால் உண்டாகும் நாற்றம் நீங்கும். நமது சருமம் மிகுந்த அழகு பெறும். பெண்களும் சரி பெண்குழந்தைகளும் சரி இந்த வாசனை குளியல் பொடியை தண்ணீரில் கலந்து குளித்து வந்தால் உடல் முழுவதும் வளரும் ரோமங்கள் வளராது.