படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு விபத்து… தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்…
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டதாகவும் அதில் தலையில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹிந்தி சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத் அவர்கள் தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தும் வருகிறார். பாலிவுட் திரையுலகில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமான நடிகர் சஞ்சய் தத் தற்பொழுது பல படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. லியோ திரைப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் அவர்கள் ஆண்டனி தாஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக லியோ படக்குழு சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தது.
மேலும் நடிகர் சஞ்சய் தத் நடிப்பில் கடந்த வருடம் வெளியான கே.ஜி.எப் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றது. கே.ஜி.ஏப் 2 திரைப்படத்தில் அதீரா என்ற கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.
நடிகர் சஞ்சய் தத் தற்பொழுது நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் டபுள் ஸ்மார்ட் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாப் பாத்திரத்தில் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார்.
இந்நிலையில் டபுள் ஸ்மார்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு தலையில் வாள் ஒன்று பலமாக பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகர் சஞ்சய் தத் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்காக இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளதாக தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது.