நடிகையாக மாறிய பைலட்… தாயின் ஆசையை நிறைவேற்ற வந்த பைலட்!!

0
89

 

நடிகையாக மாறிய பைலட்… தாயின் ஆசையை நிறைவேற்ற வந்த பைலட்…

 

பைலட்டாக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் தமிழ் சினிமா திரையுலகில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். அதுவும் தாயின் ஆசைக்காக சினிமாவில் நடிக்க வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நடிகர் சத்யராஜ், நடிகர் வசந்த் ரவி நடிக்கும் வெப்பன் திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அடுத்ததாக “சிரோ” திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. சிரோ திரைப்படத்தை விளம்பரப்பட இயக்குநர் விவேக் ராஜாராம் இயக்கவுள்ளார். சிரோ திரைப்படம் மூலமாகத்தான் பிராத்த்தனா சாப்ரியா அவர்கள் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார்.

 

விமானம் ஓட்டுவதற்கு பைலட் பயிற்சி பெற்ற பிராத்தனா சாப்ரியா அவர்கள் விமானம் ஓட்டச் செல்லாமல் தற்பொழுது நடிக்க வந்துள்ளார். பைலட் பணிக்கு செல்லாமல் பிராத்தனா சாப்ரியா அவர்கள் நடிக்க வந்ததற்கு காரணம் அவருடைய தாய் மீனா சாப்ரியா அவர்கள் ஆவார். பிராத்தனா சாப்ரியா அவர்களின் தாய் மீனா சாப்ரியா அவர்களுக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்துள்ளது. ஆனால் அந்த ஆசை நிறைவேறாததால் தனது ஆசையை மகள் பிராத்தனா சாப்ரியா அவர்கள் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள விரும்பி மகளை சினிமாவில் நடிக்க முடிவு செய்தார்.

 

இது குறித்து சிரோ திரைப்படத்தின் இயக்குநர் விவேக் ராஜாராம் அவர்கள் “ஸ்கிரிப்ட் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிரோ படத்தின் மூலமாக மகள் பிராத்தனா சாப்ரியா அவர்களை நடிகையாக அறிமுகம் செய்த மீனா சாப்ரியா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

சிரோ என்பது ஒரு கற்பனை கதாப்பாத்திரம் ஆகும். பெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஒரு தேவதை தான் சிரோ. நான் முதன்முதலாக பிராத்தனாவை சந்தித்த பொழுது இவர் இந்த கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று உணர்ந்தேன். அதுமட்டுமில்லாமல் இந்த கதாப்பாத்திரத்தில் பிராத்தனா சாப்ரியா அவர்களை நடிக்க வைக்க அவருடயை தாயார் மீனா சாப்ரியா அவர்கள் அனுமதி அளித்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

 

பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற ஒரு காம்பளக்ஸ் சப்ஜெக்டை சிரோ திரைப்படம் கொண்டுள்ளது. சிரோ திரைப்படம் குறிப்பிட்ட ஒரு ஜார்னருக்குள் வராது. ஒவ்வொரு 20 முதல் 25 நிமிடங்களுக்கும் கதை களம் மாறிக் கொண்டே இருக்கும்.

 

பெண்கள் பொதுவாக அடிப்படையிலேயே தனித்துவமான சக்தியையும் அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் தனித்துவமான குணத்தையும் கொண்டவர்கள் என்ற உண்மையை இந்த படம் மூலமாக நான் முன்வைக்க முயற்சி செய்துள்ளேன்.

 

சிரோ திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்ம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. சிரோ திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், வேலை செய்யும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை தேர்வு செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது” என்று கூறினார்.

 

Previous articleபயணிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!! இந்த நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! 
Next articleஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்… தடகள வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை!!