ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்… தடகள வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை!!

0
32

 

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்… தடகள வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை…

 

ஊக்க மருந்து பயன்படுத்தி விவகாரம் தொடர்பாக தடகள வீராங்கனை டூட்டி சந்த் அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் தடகள போட்டிகளில் பங்கேற்க கூடாது என்று உயர் நீதி மன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் அவர்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை படைத்தவர். கடந்த ஆண்டு(2022) டிசம்பர் மாதம் வீராங்கனை டூட்டி சந்த் அவர்கள் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டாரா என்பதற்கு சோதனை நடத்தப்பட்டது. இதற்காக வீராங்கனை டூட்டி சந்த் அவர்களிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

 

சோதனையின் முடிவில் வீராங்கனை டூட்டி சந்த் அவர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் வீராங்கனை டூட்டி சந்த் அவர்களுக்கு இடைக்கால தடை விதித்து சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை உத்தரவு பிறப்பித்தது.

 

இதையடுத்து சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வீராங்கனை டூட்டி சந்த் அவர்கள் மேல் முறையீடு செய்தார். ஆனால் விசாரணையின் முடிவில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெளிவாக தெரிய வந்ததால் வீராங்கனை டூட்டி சந்த் அவர்களுக்கு தடகள போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

 

இந்த தடைக்காலம் இந்த ஆண்டு ஜனவரி 3ம் தேதியில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், மாதிரி சேமிக்கப்பட்ட தேதியில் இருந்து வீராங்கனை டூட்டி சந்த் அவர்கள் பெற்ற பரிசுகளும், விருதுகளும் தகுதி நீக்கம் செய்யபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

வீராங்கனை டூட்டி சந்த் அவர்கள் விதி மீறலை வேண்டும் என்றே செய்யவில்லை என்பதை நிரூபிக்க தவறிவிட்டதால் இந்த நான்கு ஆண்டு தடை அவருக்கு விதிக்கப்படுவதாக தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு ஒழுங்கு முறை குழு தெரிவித்துள்ளது. இந்த தடை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வீராங்கனை டூட்டி சந்த் அவர்களுக்கு 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.