அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20… 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!!

0
79

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20… 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி…

 

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்வெர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி நேற்று டப்ளின் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று(ஆகஸ்ட்18) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. 59 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறிய அயர்லாந்து அணியில் களமிறங்கிய பேரி மெக்கார்தி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.

 

அதிரடியாக விளையாடிய பேரி மெக்கார்தி 51 ரன்கள் அடித்து அயர்லார்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். மற்றொரு வீரர் கர்டிஸ் காம்பர் 39 ரன்கள் அடித்தார். ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷதீப் சிங் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனால் அயர்லாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை சேர்த்தது.

 

இதையடுத்து 140 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கி பேட்டிங் செய்தது. இந்திய அணி 6.5 ஓவர்களில் பேட்டிங் செய்யும் பொழுது மழை குறுக்கிட்டது. இதையடுத்து தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து டக்வெர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

இந்திய அணி 6.5 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ஜெய்ஸிவால் 24 ரன்களும் ருத்ராஜ் கெய்க்வாட் 19 ரன்களும் எடுத்தனர். கிரியாக் யங்க் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். காயத்திலிருந்து மீண்டு நீண்ட ஓய்வுக்கு பின்னர் அணிக்கு திரும்பிய ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்துவீசி இரண்டு வெக்கெட்டுகளை கைப்பற்றியதை அடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

 

இதையடுத்து இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியாவும் அயர்லாந்தும் மோதும் இரண்டாவது டி20 போட்டி நாளை அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறுகின்றது.

 

Previous articleமஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே… மஞ்சள் நிற பொருட்களுக்கு இவ்வளவு மகிமையா…
Next articleநெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் திடீர் விபத்து… 5 பேர் காயம் அடைந்ததாக தகவல்!!