இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்…பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு!!

0
90

 

இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்…பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு…

 

இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவைகள் நிறுத்தப்படுவதாக பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருடாந்திர பரமாரிப்பு காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் 3வது படை வீடாக பழனி இருந்து வருகின்றது. பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் உள்ளூர்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வந்து செல்கின்றனர். இதனால் பழனியில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகின்றது.

 

பழனி மலைக்கு மேலே செல்ல அடிவாரத்தில் இருந்து நடந்து செல்லலாம். மேலும் இரயிலில் செல்வதும் உண்டு. அது போல ரோப் காரில் செல்லும் பக்தர்களும் இருக்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் நடந்து செல்வதையே விரும்புகின்றனர்.

 

இதில் மிக விரைவாகவும் இயற்கை அழகை ரசித்த படியும் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு ரோப் கார் சேவை ஏற்றுபுடையாதாக இருக்கின்றது. தினமும் இந்த ரோப் கார் சேவை பழனியில் பக்தர்களுக்கா இயக்கப்பட்டு வருகின்றது. அதன்படி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்காக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. இடையில் 1.30 மணி முதல் 2.30 மணி வரை ரோப் கார் பராமரிப்பு சேவை நடைபெறும்.

 

அந்த சமயம் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுவிடும். இந்த பராமரிப்பு பணியின் பொழுது ரோப், பெட்டிகள் ஆகியவை கழற்றி சீரமைப்பு செய்யப்படும். பழுதடைந்த உபகரணங்கள் ஏதேனும் இருப்பின் அவை மாற்றப்படும்.

 

இந்த நிலையால் நேற்று(ஆகஸ்ட்18) பழனி கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்த அறிவிப்பில் “வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஆகஸ்ட் 19ம் தேதி முதல்(இன்று முதல்) ரோப் கார் சேவைகள் நிறுத்தப்படுகின்றது. ஆகவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலைக்கு செல்வதற்கு பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை இரயில் ஆகியவற்றை பயன்படுத்தலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Previous articleகள்ளக்குறிச்சியில் மாயமான  தொன்மையான முருகன் சிலை… அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!!
Next articleபரவி வரும் புதிய வகை வைரஸ் !! உலக நாடுகளுக்கு WHO-வின் கடுமையான எச்சரிக்கை!!