கள்ளக்குறிச்சியில் மாயமான  தொன்மையான முருகன் சிலை… அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!!

0
34

கள்ளக்குறிச்சியில் மாயமான  தொன்மையான முருகன் சிலை… அமெரிக்காவில் கண்டுபிடிப்பு…

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காணாமல் போன தொன்மையான முருகன் சிலை தற்பொழுது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் மிகவும் பழமையான அகிலாண்டேஸ்வரி உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் ஒன்று இருந்தது. உங்கிலேயர்களின் படையெடுப்பு காரணமாக இந்த கோவில் சிதலமடைந்ததை அடுத்து அங்கு உள்ள மக்கள் அந்த கோவிலில் இருந்த சிலைகளை சேகரித்து வைத்து வழிபாடு செய்து வந்தனர்.

 

இந்த சிலைகளில் தொன்மையான முருகன் சிலை ஒன்று 2000-வது ஆண்டு திருடு போனது. அன்றைய காலத்தில் சிலை காணாமல் போனது குறித்து புகார் எதுவும் அளிக்கப்பட்டவில்லை. ஆனால் தற்பொழுதைய காலத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பல தொன்மையான சிலைகளை மீட்டு வருவதை தச்சூர் கிராம மக்கள் அறிந்தனர். இதையடுத்து தொன்மையான முருகன் சிலை காணாமல் போனதை பற்றி தச்சூர் கிராம மக்கள் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

 

இதையடுத்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி சைலேஷ்குமார் யாதவ், ஐ.ஜி தினகரன் ஆகியோரது மேற்பார்வையில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் காணாமல் போன முருகன் சிலையை மீட்கும் பணியின் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து தொடர்ந்து விசாரணை நடத்திய சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தச்சூர் சிவன் கோவிலில் இருந்து காணாமல் போன நின்ற நிலையில் இருந்த முருகன் சிலையானது அமெரிக்க நாட்டின் உள்பாட்டு புலனாய்வு அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை கண்டுபிடித்தனர்.

 

இந்த முருகன் சிலையை மத்திய அரசின் உதவியோடு மீட்டு தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தற்பொழுது சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையனர் செய்து வருகின்றனர்.