பிரியாணி இல்லை புளியோதரை தானாம் : அதிமுக மாநாட்டில் சோதப்பிய சாப்பாடு !!

0
123

பிரியாணி இல்லை புளியோதரை தானாம் : அதிமுக மாநாட்டில் சோதப்பிய சாப்பாடு

அதிமுக மாநாட்டில் பங்கேற்ற கட்சி தொண்டர்கள், தங்களுக்கு புலியோதரை, சாம்பார் சாதம் வழங்கப்பட்டதால் அதிமுகவினர் சாப்பாட்டை அப்படியே குப்பையில் வீசிவிட்டு சென்றனர். இச்சம்பவம் அதிமுக தலைமையை வேதனை அடைய செய்துள்ளது.

அதிமுக மாநில மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணாக்கப்பட்டது குறித்து பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகின. ஏறத்தாழ 6 டன் உணவு குப்பையில் கொட்டப்பட்டதாகவும் கூறபடுகிறது.

கோடிக்கணக்கில் செலவிடப்பட்டதாக குறிப்பிடும் அதிமுக மாநாட்டில் காலை உணவாக புலியோதரையும், சாம்பார் சாதமும் வழங்கப்பட்டது. மதிய உணவாக அதே புளியோதரை வழங்கப்பட்டதால், தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். இதில், சாம்பார் சரியாக வேகவில்லை என்றும் பச்சை வாடை அப்படியே தெரிவதாக உணவை சாப்பிட்ட அதிமுக தொண்டர்கள் தெரிவித்தனர்.

மிகப்பெரிய மாநில மாநாடு நடைபெறும் நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கறிசோறு போடுவார்கள் என்று எதிர்பார்த்த அதிமுக தொண்டர்களுக்கு, புலியோதரையும், சாம்பார் சாதமும் தான் மிஞ்சியது. இதனால் தொண்டர்களும் உணவை குப்பையில் தூங்கி வீசிவிட்டனர். மாநாட்டுக்கு வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அந்த உணவை எட்டிக்கூட பார்க்கவில்லை.

இதனால் டன் கணக்கில் புளியோதரையும், சாம்பார் சாதமும் வீணாகின. இது குறித்து பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதிமுக கட்சிக்கும் நடைபெற்ற மாநாட்டிற்கும் சாப்பாடு விஷயம் அவப்பெயரை தான் பெற்று தந்தது.

Previous articleதந்தை இறந்தது கூட தெரியாமல் உலகக் கோப்பையில் விளையாடிய வீராங்கனை… பின்னர் வெளியிட்ட உருக்கமான பதிவு… 
Next articleமகள் திவ்யாவின் நடனத்தை பார்த்து அசந்துபோன விஜய் – மாஸ் வீடியோ வைரல்!