பாதத்தில் வெடிப்புகள் மறைய!! சில எளிமையான வீட்டு வைத்திய முறைகள்!!

0
114

பாதத்தில் வெடிப்புகள் மறைய!! சில எளிமையான வீட்டு வைத்திய முறைகள்!!

நமது பாதத்தில் உள்ள வெடிப்புகள் மறைவதற்கு சில எளிமையான வீட்டு மருத்துவக் குறிப்புகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நாம் நமது முகத்திற்கு எந்த அளவிற்கு முன்னுரிமை கொடுத்து முக அழகை பாதுக்காத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு பாதத்தின் அளவிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாதம் அழகு என்பதை விட பாதத்தை பாதுகாப்பாக வைத்துத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.

பாதத்தில் உள்ள வெடிப்புகள் மூலமாக நம் உடலுக்குள் அதிகமாக கிருமிகள் நுழைந்து நமது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடும். இதனால் நாம் அனைவரும் பாத வெடிப்புகளுக்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த பாத வெடிப்புகளை குணமாக்க சில இயற்கையான மருத்துவ முறைகளை பற்றி பார்க்கலாம்.

பாத வெடிப்புகளை குணமாக்கும் சில மருத்துவக் குறிப்புகள் :

* மருதாணி இலையுடன் கிழங்கு மஞ்சளை வைத்து அரைத்து இரவு பாத வெடிப்புகள் உள்ள இடத்தில் பற்று போட வேண்டும். மருதாணி பாதத்திற்கு அதிக குளிர்ச்சி தரும். இதனால் 20 நிமிடம் மட்டும் வைத்து இதை கழுவி விட வேண்டும். மேலும் மஞ்சளில் உள்ள கிருமி நாசினி நமது தோல்களில் உள்ள கிருமிகளை அழித்து பாத வெடிப்புகளை குணமாக்குகின்றது.

* எலுமிச்சை சாறை வெந்நீருடன் கலந்து அதில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழிந்த பிறகு பீர்க்கன் நாரைக் கொண்டு பாதங்களை தேய்க்க வேண்டும். எலுமிச்சையில் உள்ள கிருமி நாசினி நமது பாதத்தில் உள்ள கிருமிகள் அனைத்தையும் அழித்து நமது பாதங்களை பாதுகாக்கும்.

* மஞ்சள் மிகப் பெரிய கிருமி நாசினி என்பது நமக்கு தெரியும். மஞ்சள் பொடியை நல்லெண்ணெயில் கலந்து பேஸ்ட் போல தயார் செய்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். இதனால் பாத வெடிப்புகள் குணமாகும்.

* வறண்ட பாதத்தை கொண்டிருப்பவகள் பாத வெடிப்புகளுக்கு ஆயில் மசாஜ் செய்யலாம். அதாவது ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி ஆயில் மசாஜ் செய்யலாம். இதனால் வறண்ட பாதம் மறைந்து பாதத்திற்கு ஈரப்பதம் மற்றும் எண்ணெய் சத்துக்கள் கிடைக்கும். மேலும் பாத வெடிப்புகள் மெல்ல மெல்ல குறையத் தொடங்கும்.

Previous articleசருமம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா!! தினமும் தேங்காய் பால் குடிக்கலாம்!! இதனால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!!
Next articleமுட்டை அதிகளவில் சாப்பிட்டால் ஆபத்தா? வெளியான ஷாக் தகவல் !!