ஆனந்த கண்ணீரில் கண்ணதாசன் காலில் விழுந்த விசு!! வெளியான சுவாரஸ்ய சம்பவம்!!

0
43

ஆனந்த கண்ணீரில் கண்ணதாசன் காலில் விழுந்த விசு!! வெளியான சுவாரஸ்ய சம்பவம்!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர் இயக்குநரும், நடிகருமான விசு. இவர் குடும்பம் அடிப்படையிலான படங்களில் நடித்து, இயக்கியதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவருடைய படங்களில் அனைத்தும் வீட்டை சுற்றி சுற்றியே எடுக்கப்பட்டிருக்கும்.

இவருடைய முதல் படம் குடும்பம் ஒரு கதம்பம். இப்படத்தில் விசு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்திருந்தார். இதனையடுத்து இவர் சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிரு, சிகாமணி ரமாமணி, வாசுகி, அருணாச்சலம், மாயா பஜார் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். எஸ்.பி.முத்துராமன் இப்படத்தை இயக்கினார். இப்படத்தின் ஒரு பாடலுக்காக விசு, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சென்றுள்ளார். அங்கு கண்ணதாசனும் இருந்துள்ளார். அப்போது எம்.எஸ்.வி.யிடம் விசு பாடலை எழுதுவதற்கான சூழ்நிலையை, படத்தின் கதையையும் விரிவாக எடுத்து கூறியுள்ளார்.

விசு கதையை சொல்லிக்கொண்டிருந்தபோது, கண்ணதாசன் திடீரென்று விசுவின் தொடையை கிள்ளியுள்ளார். இதனால், ஷாக்கான விசு அய்யோ… நம்முடைய முதல் படம் இது. நாமா எவ்வளவு சீரியசா கதையை சொல்லிக்கொண்டிருக்கிறோம். இவர் என்னென்னா… என் தொடையை கிள்ளி விளையாடிக்கிட்டு இருக்காறே.. நல்லபடியா பாடல் வருமா என்று மனத்திற்குள்ளேயே நினைத்துக் கொண்டுள்ளாராம். கதையை சொல்லி முடித்துள்ளார்.

அத்தருணம் கண்ணதாசன், விசு கதையை சொல்லி முடித்ததும், ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தின் வரிகளை கண்ணதாசன் சொல்ல தொடங்கியுள்ளார். அப்படத்திற்கு ஏற்றாற்போல் பாடல் வரிகளை வரி, வரியாக சொல்ல, அசந்து போயுள்ளார் விசு. என்னடா… இவ்வளவு நேரம் நாம் சொன்ன கதையை அழகான பாடல் வரிகளிலேயே சொல்லிவிட்டாரே என்று நெகிழ்ந்து போய் ஆனந்த கண்ணீரில் கண்ணதாசன் காலிலேயே விழுந்துவிட்டாராம் விசு.