தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் கொடுக்கும் நடிகருக்கு வந்த சிக்கல்!!

0
92

தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் கொடுக்கும் நடிகருக்கு வந்த சிக்கல்!!

 

வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த நடிகர் சிலம்பரசன் அவர்கள் திருப்பி செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு காலக்கெடுவும் நிர்ணயத்துள்ளது. அடுத்த மாதம் 19ம் தேதிக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு எந்த படமும் சரியாக போகவில்லை். படம் வெளியாவதிலும் சிக்கல் நீடித்தது. கொரோனா நோய் தொற்று பிரச்சனை முடிந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் மாநாடு என்ற படம் நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு மிகப்பெரும் வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு மற்றும் பத்துதல ஆகிய படங்களும் வெற்றி பெற்றன. இதையடுத்து தற்போது முன்னணி நடிகர்கள் பட்டியலில் மீண்டும் இடம்பெற்றுள்ளார், நடிகர் சிலம்பரசன். தற்போது,  ரொம்ப பிசியாக இருக்கும் நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

 

இந்த வெற்றி படங்களுக்கெல்லாம் முன்பு வேல்ஸ் பட நிறுவனத்தின் உரிமையாளரான ஐசரி கணேசன் அவர்கள் நடிகர் சிலம்பரசனிடம் தங்கள் நிறுவனத்தில் மூன்று படங்களில் நடிக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு நடிகர் சிலம்பரசன் அவர்களும் ஒப்புக்கொண்டு  ஆவணங்களில் கையெழுத்திட்டதாகவும், ஒரு குறிப்பிட்ட தொகையை முன் பணமாக பெற்றதாகவும் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் இயக்குனர் கோகுல் அவர்களின் இயக்கத்தில் கொரோனா குமார் என்று தலைப்பில் ஒரு நகைச்சுவை படம் உருவாகியிருந்தது. ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக படம் முழுமை அடையவில்லை.

நடிகர் சிலம்பரசன் அவர்களும் அப்படி தனது அடுத்த படங்களின் மீது கவனம் செலுத்தி வருகிறார். பிரச்சனை இங்குதான் ஆரம்பித்தது நடிகர் கமலஹாசன் அவர்களின் தயாரிப்பில் ஒரு புதிய படத்தின் நடிகர் சிலம்பரசன் அவர்கள் நடிக்க இருக்கிறார். தனது படத்தை முழுமையாக முடிக்காமல் வேறு படத்திற்கு செல்லக்கூடாது என ஐசரி கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.

 

இந்நிலையில், வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த நடிகர் சிலம்பரசன் அவர்கள் திருப்பி செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு காலக்கெடுவும் நிர்ணயத்துள்ளது. அடுத்த மாதம் 19ம் தேதிக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக தயாரிப்பாளர்களுக்கு தான் பிரச்சனை கொடுப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கே பிரச்சனையை வந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Previous articleஆனந்த கண்ணீரில் கண்ணதாசன் காலில் விழுந்த விசு!! வெளியான சுவாரஸ்ய சம்பவம்!!
Next article‘சூப்பர் ப்ளூ மூன்’ பற்றிய அறிய தகவல்கள் !!