முதுகில் பருக்கள் அதிகமாக உள்ளதா!!! அதை குணமாக்க சில எளிமையான வழிமுறைகள் இதோ!!!

0
84

முதுகில் பருக்கள் அதிகமாக உள்ளதா!!! அதை குணமாக்க சில எளிமையான வழிமுறைகள் இதோ!!

முதுகில் அதிகமாக உள்ள பருக்களை நீக்க என்ன செய்ய வேண்டும் அதற்கான எளிமையான வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நம்மில் சிலருக்கு முதுகில் பருக்கள் இருக்கும். இந்த பருக்கள் நமது உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைவதால் ஏற்படுகின்றது. மேலும் உடல் சூடு காரணமாகவும் இந்த பருக்கள் ஏற்படுகின்றது.

பருக்கள் என்பது முதுகில் மட்டும் தோன்றாது. இந்த பருக்கள் முகத்திலும் தோன்றி முக அழகை கெடுக்கும். தற்பொழுது முதுகில் தோன்றும் பருக்களை நீக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி தற்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

பருக்களை நீக்க சில எளிமையான டிப்ஸ்…

* சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை சந்தனம் போக்குகின்றது. இதனால் சந்தனத்தை எடுத்து ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட் போல தயார் செய்து அதை முதுகில் தேய்க்க பருக்கள் நீங்கும்.

* நம் சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் பொருள்களில் கற்றாழை ஜெல் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த கற்றாழை ஜெல்லை எடுத்து முதுகில் பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் முதுகில் உள்ள பருக்கள் நீங்கும்.

* மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள ஒரு பொருள் ஆகும். மேலும் இது ஒரு நல்ல கிருமி நாசினியும் கூட. அதனால் மஞ்சள் பொடியை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் போல தயார் செய்து முதுகில் பருக்கள் உள்ள பகுதியில் தேய்த்து வந்தால் பருக்கள் மறையத் தெடங்கும்.

* தேன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்த ஒரு பொருளாகும். இந்த தேனை அப்படியே எடுத்து முதுகில் பருக்கள் உள்ள இடத்தில் தேய்க்கலாம். இதன் மூலமாக முதுகில் உள்ள பருக்கள் மறையத் தொடங்கும்.

* நாம் சாப்பாட்டுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் தயிரை வைத்து முதுகில் உள்ள பருக்களை மறையச் செய்யலாம். ஆம் சிறிதளவு தயிர் எடுத்து அதில் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலந்து முதுகில் பருக்கள் உள்ள இடங்களில் தேய்க்கலாம்.

* தக்காளியை இரண்டாக வெட்டி அதை அப்படியே முதுகில் பருக்கள் உள்ள இடங்களில் தேய்க்கலாம். பின்னர் சிறிது நேரம் கழிந்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதன் மூலமாக முதுகில் உள்ள பருக்கள் மறையும்.

* எலுமிச்சை சாறை வைத்தும் முதுகில் உள்ள பருக்களை நாம் மறையச் செய்யலாம். அதற்கு எலுமிச்சை சாறை எடுத்து முதுகில் பருக்கள் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரால் முதுகை கழுவினால் பருக்கள் மறைந்து விடும்.

 

Previous articleதினமும் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
Next articleபல நோய்களுக்கு மருந்தாகும் வேப்பம் பூ!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!