நடிகர் ஜனகராஜ் – இசைஞானி இளையராஜா இடையேயான நட்பு!!

0
90

நடிகர் ஜனகராஜ் – இசைஞானி இளையராஜா இடையேயான நட்பு!!

நடிகர் ஜனகராஜ் ஒரு நல்ல நடிகர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த வயலின் கலைஞர். அதனால் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும் நடிகர் ஜனகராஜ்  அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது.

ஜனகராஜ் ஒரு நடிகர் மட்டுமல்ல சிறந்த வயலின் இசைப்பவரும் கூட, ஆரம்ப காலத்தில் சினிமாவில் நுழைவதற்காக முயற்சிக்கும் போது அவர் முதலில் கற்றுக் கொண்டது வயலின் இசைப்பதை தான். அந்தக் காலகட்டத்தில் இருந்த நடிகர்களுள் வயலின் வாசிப்பது போன்ற இசை சம்பந்தமானவற்றில் திறமை பெற்று இருந்ததால் மற்ற நடிகர்களை விட ஜனகராஜுக்கும் இளையராஜாவிற்கும் இடையே நல்ல நட்பு இருந்துள்ளது.

80களில் இசை கடவுளாக நினைத்து கொண்டாடப்பட்டு வந்த இளையராஜாவின் கண் பார்வை பட்டாலே போதும் என்று பல இயக்குனர்களும், நடிகர்களும் பிரசாத் ஸ்டுடியோ வாசலில் இளையராஜாவின் கருணை பார்வைக்கு தவம் இருந்த நேரத்தில்,

இளையராஜாவே மிகவும் விருப்பப்பட்டு அழைத்து உரையாடக்கூடிய மனிதராக ஜனகராஜ் இருந்துள்ளார். இளையராஜாவிடம் பேசுவதற்கே அனைவரும் பயந்த சூழ்நிலையிலும் இளையராஜாவுடன் சாதாரணமாக பேசும் அளவிற்கு அவர்களுக்கிடையே புரிதல் இருந்துள்ளது.

அதன் காரணமாகத்தான்  “புதுப்புது அர்த்தங்கள் படத்தில் வரும் வயலின் கலைஞரான “ஜாலி”என்கிற ஒரு கதாபாத்திரத்தை நாகேஷிற்காக அமைத்திருந்தார் இயக்குநர் பாலச்சந்தர். நாகேஷ் ஒரு காலக்கட்டத்தில் குளிக்க கூட நேரமில்லாமல் நடித்துக்கொண்டே சுற்றிக்கொண்டிருந்தார். அதை காட்டும் வகையில் ஒரு கதாபாத்திரத்தை பாலச்சந்தர் எழுதியிருந்தார்.ஆனால் இளையராஜா பாலச்சந்தரிடம் பேசி அந்த வாய்ப்பை ஜனகராஜ்க்கு வாங்கி தந்துள்ளார்”.

சினிமாக்களில் கதாநாயகர்களுக்கு மட்டுமே தன் சொந்த குரலால் பாடும் பழக்கத்தை கொண்டிருந்த இளையராஜா கொஞ்சம் இறங்கி காமெடி நடிகருக்காகவும் தன் சொந்தக் குரலில் பாடி உள்ளது ஜனகராஜுக்கு மட்டும் தான். சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி உள்ள நடிகர் ஜனகராஜ் அவர்கள் வெளிநாட்டில் பிசினஸ் செய்து வருவதாக கூறப்படுகிறது.