எதிர்பார்ப்பு நிறைந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி!!! மழை குறுக்கிட்டதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!!!

0
93

எதிர்பார்ப்பு நிறைந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி!!! மழை குறுக்கிட்டதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!!!

ரசிகர்களின்.மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று(செப்டம்பர்2) நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியா கப் கிரிக்கெட் போட்டியில் மழை பெய்ததால் டிராவில் முடிந்தது. இந்த போட்டியை காண்பதற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் மைதானத்திற்கு வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி ஒருநாள் வகை கிரிக்கெட் போட்டியில் ஆசியா கப் சேய்பியன்ஸ் தொடரில் மோதியது. இந்த போட்டி நேற்று அதாவது செப்டம்பர் 2ம் தேதி இலங்கையில் உள்ள பல்லெகெலே மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட் செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 11 ரன்களுக்கும் சுப்மான் கில் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளக்க பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை பொய்யாக்கி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். காயத்தில் இருந்து குணமைடந்து நேராக அணிக்கு திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.

பின்னர் இணைந்த இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா இணை அதிரடியாக ரன்களை சேர்க்க தொடங்கினர். 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த இந்திய அணியை 200 ரன்களுக்கும் மேல் கொண்டு வந்தனர்.

சிறப்பாக விளையாடிய இஷான் காஷன் அரைசதம் அடித்து 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்து 87 ரன்கள் சேர்த்து ஆட்டமிந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க 48.5 ஓவர்களில் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு சாஹீன் அப்ரிடி 10 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நசீம் சா, ஹரிஸ் ராவுப் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு 267 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் முதல் இன்னிங்ஸில் மழை பெய்தது போலவே இரண்டாவது இன்னிசங்சிலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. கடைசியில் 20 ஓவராக குறைக்கப்பட்டு பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய வைக்கலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மழை சிறுதும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பெய்து வந்ததால் ஆட்டம் சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது. குரூப் ஏ பிரிவின் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே நேபாளம் அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. இதையடுத்து இன்றைய போட்டியில் முடிவு அறிவிக்கப்படாமல் டிராவில் முடிந்ததால் பாகிஸ்தான் அணி மேலும் ஒரு புள்ளியை பெற்றது.

ஆக மொத்தம் 3 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற.வேண்டும் என்று நினைத்தால் நேபாளம் அணியுடனான போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

 

Previous articleஎன்ன குழந்தை இருக்கும்னு பார்த்தால் குட்டி விசிறி தான் இருக்கு.. எப்படியெல்லாம் மக்கள ஏமாத்துராங்க பாருங்க !!
Next articleஆதித்யா எல்1 நான்கு மாதங்களுக்கு பிறகு இலக்கை அடையும்!!! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!!