என்ன குழந்தை இருக்கும்னு பார்த்தால் குட்டி விசிறி தான் இருக்கு.. எப்படியெல்லாம் மக்கள ஏமாத்துராங்க பாருங்க !!

0
39

என்ன குழந்தை இருக்கும்னு பார்த்தால் குட்டி விசிறி தான் இருக்கு… எப்படியெல்லாம் மக்கள ஏமாத்துராங்க பாருங்க….

தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோவை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் லாவண்யா அவர்கள் பகிர்ந்துள்ளார்.

திரைப்படங்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதைப் போல சின்னத்திரை சீரியல்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் உருவாகி அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.இந்த சீரியல்கள் பெரியவர்களை மட்டுமில்லாமல் சிறியவர், இளைஞர்கள் ஆகியோரையும் கவர்ந்து வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகின்றது.

அதிலும் குறிப்பாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனியாக ரசிகர்கள் கடல் போல உள்ளனர். அந்த விஜய் தொலைக்காட்சி தொடர்களில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் தொலைகாட்சி தெடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் லாவண்யா அவர்கள் வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு காட்சியை படமாக்கிக் கொண்டிருக்க முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் லாவண்யா அவர்கள் கையில் குழந்தை வைத்திருப்பது போல நடிக்கிறார்.

ஆனால் நிஜமாக சற்று செல்போன் கேமரா உயர்த்தப்பட்ட பொழுது அங்கு ஒரு டிவிஸ்ட் இருந்தது. அதாவது குழந்தை இருக்க வேண்டிய இடத்தில் வெறும் குட்டி விசிறி இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் அனைவரும் எப்படியெல்லாம் ஏமாத்துராங்க பாருங்க என்று கமெண்ட் செய்தா வருகிறார்.