ஒரே நாளில் மூன்று திரைப்படங்களின் டிரெய்லர்!!! அடுத்தடுத்து ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரெய்லர்கள்!!!

0
107

ஒரே நாளில் மூன்று திரைப்படங்களின் டிரெய்லர்!!! அடுத்தடுத்து ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரெய்லர்கள்!!!

இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று நடிகர்களின் திரைப்படங்களின் டிரெய்லர் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே சூரியா, சுனில், இயக்குநர் செல்வராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது. அதாவது சரியாக 10.08 மணிக்கு மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது.

அதன் பிறகு மனிதன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் அஹமது இயக்கத்தில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் உருவாகியுள்ளது. இறைவன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இறைவன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று(செப்டம்பர்3) காலை 11.11 மணிக்கு வெளியாகவுள்ளது.

அடுத்து இயக்குநர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி2 திரைப்படத்தின் டிரெய்லரும் இன்று(செப்டம்பர் 3) வெளியாகின்றது. சந்திரமுகி2 திரைப்படத்தில் நடிகர்கள் வடிவேலு, ராதிகா சரத்குமார், கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்திரமுகி2 திரைப்படத்தின் டிரெய்லர் இன்று(செப்டம்பர்3) மாலை 4 மணிக்கு வெளியாகின்றது.

 

Previous article4000 கிலோ மீட்டர் படுத்தபடியே இராமேஸ்வரத்துக்கு வந்த சாதுக்கள்!!! 
Next articleஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி விபத்து!!! பரிதாபமாக 10 பேர் பலியானதாக தகவல்!!!