4000 கிலோ மீட்டர் படுத்தபடியே இராமேஸ்வரத்துக்கு வந்த சாதுக்கள்!!! 

0
54

4000 கிலோ மீட்டர் படுத்தபடியே இராமேஸ்வரத்துக்கு வந்த சாதுக்கள்!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து 4000 கிலோ மீட்டர் தூரம் சாலையில் படுத்து எழுந்தபடியே இராமேஸ்வரம் வந்த சாதுக்கள் சுவாமி தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரியில் மோனி பாபா, தாமோதரதாஸ், துளசிதாஸ் உள்ளிட்ட ஏழு சாதுக்கள் புனித நீராடினர். அதன் பிறகு சாதுக்கள் ஏழு பேரும் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதற்கு முடிவு செய்துள்ளனர்.

அதன்படி கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் மூன்று சாதுக்கள் மட்டும் படுத்து எழுந்தபடி இராமேஸ்வரம் செல்லும் பயணத்தை தொடங்கினர். உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலை வழியாக பயணத்தை தொடங்கிய 3 சாதுக்கள் உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக பயணித்து நேற்று(செப்டம்பர்2) இராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தடைந்தனர்.

இந்த 3 சாதுக்களும் தினசரி சாலையில் 10 கிலோ மீட்டர் படுத்தும் எழுந்தபடியே 13 மாதங்களில் சாலை வழியாக இராமேஸ்வரம் வந்துள்ளனர். இவர்களுக்கு நான்கு சாதுக்கள் வழிகாட்டியாக காரில் வந்தனர். பின்னர் நேற்று(செப்டம்பர் 2) இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சாதுக்கள் காரில் கங்கோத்ரி செல்லவுள்ளதாக கூறினர்.