ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி விபத்து!!! பரிதாபமாக 10 பேர் பலியானதாக தகவல்!!!

0
108

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி விபத்து!!! பரிதாபமாக 10 பேர் பலியானதாக தகவல்!!!

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்குள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் இரட்டை நாகரங்கள் என்று அழைக்கப்படும் புவனேஷ்வர் மற்றும் கட்டாக் ஆகிய பகுதிகளிலும், ஒடிசா மாநிலத்தின் கடோலரப் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.

ஒடிசா மாநிலத்தில் நேற்று(செப்டம்பர்2) மதியம் 126 மிமீ மழை பெய்துள்ளது. பிறகு 90 நிமிடங்கள் கழிந்து மீண்டும் பெய்த கனமழை 95.8 மிமீ அளவாக பதிவாகியது. ஒடிசா மாநிலத்தில் நேற்று(செப்டம்பர்2) 6 மாவட்டங்களில் கன மழை பெய்தது.

மின்னலுடன் பெய்த கனமழையில் 6 மாவட்டங்களிலும் ம3ன்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி குர்தா மாவட்டத்தால் 4 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

போலங்கிரில் 2 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். அங்குல், பௌத், ஜகத்சிங்பூர், தேன்கனல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மொத்தம் ஒடிசா மாநிலத்தில் 10 பேர் மின்னல் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர் என்று ஒடிசா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேலும் மின்னல் தாக்கியதில் குர்தா மாவட்டத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு ஒடிசா மாநிலத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Previous articleஒரே நாளில் மூன்று திரைப்படங்களின் டிரெய்லர்!!! அடுத்தடுத்து ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரெய்லர்கள்!!!
Next articleதொண்டியில் தமுமுக 29 ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு முப்பெரும் விழா!!