வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!! இனி நான்கு நாட்களுக்கு மழைதான்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

0
178

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!! இனி நான்கு நாட்களுக்கு மழைதான்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

வங்கக்கடலில் செப்டம்பர் 6ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால் நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வங்கக் கடலில் உருவாக இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் மேலும் தமிழகத்தில் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னல வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல்(செப்டம்பர்4) செப்டம்பர் 7ம் தேதி வரை தமிழதம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று(செப்டம்பர்4) தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் நாளை(செப்டம்பர்5) திண்டுக்கல், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களிலும், செப்டம்பர் 6ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் செப்டம்பர் 7ம் தேதி திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆ4இய மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்றும் செப்டம்பர் 8, செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரை இன்றும்(செப்டம்பர்4), நாளையும்(செப்டம்பர்5) வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. வெப்பநிலை பொறுத்த வரை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் அளவு இருக்கும்.

இலங்கையை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் செப்டம்பர் 7ம் தேதி சூரைக்காற்று வீசும். அதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல கூடாது. செப்டம்பர் 3ம் தேதி 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லியில் 11 செ.மீ மழையும், செங்கத்தில் 10 செ.மீ மழையும், ஆர்.கே பேட்டை மற்றும் வானூரில் தலா 9 செ.மீ மழையும், வெங்கூரில் 8 செ.மீ மழையும் பெய்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் 5ம் தேதி முதல் செப்டம்பர் 6ம் தேதிக்குள் வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் சில இடங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

 

Previous articleடிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு!!! ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!
Next article10 வகுப்பு முடித்தவர்களுக்கு நீலகிரியில் ரூ.81000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! நண்பர்களே உடனே விண்ணப்பியுங்கள்!