10 வகுப்பு முடித்தவர்களுக்கு நீலகிரியில் ரூ.81000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! நண்பர்களே உடனே விண்ணப்பியுங்கள்!

0
60

10 வகுப்பு முடித்தவர்களுக்கு நீலகிரியில் ரூ.81000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! நண்பர்களே உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர்,லோயர் டிவிஷன் கிளர்க்,சிவிலியன் மோட்டோர் டிரைவர்உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.

பணியிடங்கள்: மொத்தம் 44 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வெல்லிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் ஸ்டெனோகிராபர் பணிக்கு 4பேர்,லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 07 பேர்,டிரைவர் பணிக்கு 5 பேர், சுகானி பணிக்கு ஒருவர்,தீயணைப்பு வீரர் பணிக்கு 16 பேர்,சமையலர் பணிக்கு 3 பேர்,டெக்னிக்கல் அட்டண்டண்ட் – பிரிண்டிங் மெஷின் ஆபரேட்டர் பணிக்கு ஒருவர்,மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 7 பேர் என மொத்தம் 44 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் ஹெவி லைசன்ஸ் வைத்திருப்பதோடு குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு டைப்ரைட்டிங் திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.ஒரு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற அடிப்படையில் 10 நிமிடம் தேர்வு நடைபெறும்.

வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிப்பவர்களுக்கு வயது 18 முதல் 27க்குள் இருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும்,ஒபிசி (பொதுப் பிரிவினருக்கு) 3 ஆண்டுகளும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்:

ஸடெனோகிராபர் பணி:மாதம் ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

டிவிஷன் கிளர்க் பணி: மாதம் ரூ. 19,9000/- முதல் ரூ.63,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

சிவிலியன் மோட்டோர் டிரைவர் பணி: மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

சுகானி,ஃபயர் மேன்,சமையலர் பணிகள்: மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

டெக்னிக்கல் அட்டன்ண்டண்ட் பணி: மாதம் ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

மல்டி டாஸ்கிங் பணி: மாதம் ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இப்பணிகள் குறித்த முழு விவரம் அறிய https://www.dssc.gov.in/files/rec2023.pdf செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் முறை

மேலே சொல்லப்பட்டுள்ள பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் தேவையான கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன்,விண்ணப்பத்தில் எந்த பதவிக்கு விண்ணப்பம் செய்கிறீர்கள் என்பதை தெளிவா குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

முகவரி:

விண்ணப்பங்களை “APPLICATION FOR THE POST OF ___” and addressed to The Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) – 643 231. Tamil Nadu. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி நாள்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23-09-2023 ஆகும்.