பும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! என்றும் தல தான் பெஸ்ட் மத்தவங்களாம் வேஸ்ட்!!

0
108

பும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! என்றும் தல தான் பெஸ்ட் மத்தவங்களாம் வேஸ்ட்!!

ஆறு அணிகள் பங்கேற்றுள்ள 14வது ஆசியக் கோப்பை தொடர் கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் இந்தத் தொடர் பல்லகெலெவில் இன்று நடைபெற உள்ளது. இதற்கு முன் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய அதே மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறும் எனக் கூறியுள்ளனர்.

ஆசிய முதல் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது.இதில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 266 ரன்கள் எடுத்துக் குவித்தது. ஆனால் கனமழை பெய்ய நேரிட்டதால் இப் போட்டியானது ரத்து செய்யப்பட்டது

இந்திய கிரிக்கெட் வீரர்களின் முக்கிய வீரராகத் திகழப்படும் வீரர் பூம்ரா. இவர் காயம் காரணமாக சில மாதங்களாக ஓய்விலிருந்தார். தற்பொழுது அவர் உடல்நிலை சரியானதை, தொடர்ந்து அவர் ஆசியக் கோப்பைத் தொடரை விளையாட முடிவு செய்தார். பூம்ராவின் பந்துவீச்சு தான், இந்திய அணியை வெற்றியடையச் செய்யும் என ரசிகர்கள் நம்பினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு பூம்ரா போட்டியில் விளையாடுவதால், அவரது பந்துவீச்சைப் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

அதையடுத்து இன்று இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இதில் பூம்ராவின் பந்துவீச்சைப் பார்த்து விடலாம் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தரும் வகையில் பூம்பரா இப்போட்டியிலிருந்து விலகி தனது தாய் நாட்டிற்குச் சென்றுவிட்டார் .

பூம்ரா இப்போட்டியிலிருந்து விலகியதற்கான காரணங்கள் முன்பு சொல்லப்படாத நிலையிலிருந்தன.ஆனால் இப்போது வெளிவந்த அறிவிப்பின்படி, அவரது மனைவியின் பிரசவம் காரணமாகவே,வெளியேறியதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில் இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியினை தெரியப்படுத்தியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு இந்திய அணி, ஆஸ்திரேலிய தொடரில், பங்கேற்றபோது, இந்திய அணியின் கேப்டனான, விராட் கோலி அவர்களும், போட்டியின் பாதியில் வெளியேறியது போல், பூமராவும் செய்துள்ளதை, ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றன.

அவ்வாறே இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா,வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பூம்ரா மற்றும் விராட் கோலியின் இந்த செயலை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். ஆனால் எம் எஸ். தோனி இவர்களைப் போல் இல்லாமல், 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன், இந்திய அணி கேப்டனாக இருந்தவர், இவர் மனைவியின் பிரசவத்திற்குச் செல்லாமல் கூட தாய் நாட்டிற்காக விளையாட வேண்டும், என்பதற்கே முக்கியத்துவம் கொடுத்தார். இவருடைய இந்த உணர்வுபூர்வமான செயலையும் , பூம்புரா மற்றும் விராட் கோலியின், மோசமான செயலையும் ரசிகர்கள் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.

இந்தியா அணிக்கான முக்கியமான தொடர்களில்,பூம்ரா விளையாடாமல் சென்றது 100கோடி இந்திய ரசிகர்களை இங்குக் கோபமடைய, செய்துள்ளது.

மீண்டும் பூம்ரா எப்போது அணியில் சேர்வார் ? என்ற கேள்விக்கான பதில் இப்போது வரை கிடைக்கவில்லை.

Previous articleபிகினிக் உடையில் கையில் பாட்டிலுடன் கோவா ஓபன் பாரில் அமலாபால்!
Next articleஎல்லாம் அயோக்கியத்தனம்.. ஜெமினி எப்படிப்பட்டவர்ன்னு தெரியுமா? – காந்தராஜ் ஓபன் டாக்