ஆசிய கோப்பை ரத்து? இறுதி கட்ட முடிவில் ஜெய்ஷா – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்

0
70

ஆசிய கோப்பை ரத்து? இறுதி கட்ட முடிவில் ஜெய்ஷா – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்

இலங்கையில் தொடர் கனமழை காரணமாக ஆசிய கோப்பை ரத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா-பாகிஸ்தான் இலங்கையில் நேற்று முன்தினம் மோதியது. ஆனால், தொடர்ந்து கனமழை பெய்ததால், இப்போட்டி ரத்தாகி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்நிலையில், இலங்கையில் இன்னும் ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட உள்ளது. இதற்கிடையில் அடுத்து நடைபெற உள்ள போட்டியை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஜெய்ஷா தலைமையிலான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஒழுங்கா போட்டியை பாகிஸ்தானிலேயே நடத்தி இருந்திருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், ஜெய்ஷாவால் போட்டிகள் ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் போட்டிகளை இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றலாமா என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் யோசனை செய்து வருகிறது. ஆனால், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அருகிலேயே வந்துவிட்டதால், அதற்கெல்லாம் தற்போது நேரம் இல்லாததால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்தாகும் வாய்ப்பு ஏற்பட்டதாலும் ஏற்படலாம் என்று பலரது கருத்தாக உள்ளது.