ஆவின் நிறுவனத்தில் பணி!! மாதம் ரூ.43000 சம்பளம் கிடைக்கும்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
132
#image_title

ஆவின் நிறுவனத்தில் பணி!! மாதம் ரூ.43000 சம்பளம் கிடைக்கும்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும்
ஆவின் நிறுவத்தில் நேர்காணல் முறையில் கால்நடை ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.அதன்படி தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ஸ் (கால்நடை ஆலோசகர்) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இது ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணி என்பதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் 9 மாதம் பணியமர்த்தப்படுவார்கள்.அதன் பிறகு அவர்கள் தேவையை பொறுத்து பணி நீட்டிப்பு பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை வகை: அரசு வேலை

பணி: வெட்னரி கன்சல்டன்ட்(கால்நடை ஆலோசகர்)

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: கால்நடை ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இளங்கலை பிரிவில் வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி (B.V.Sc. & A.H) அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்து,கம்யூட்டர் குறித்த திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.விண்ணப்பம் செய்வோர் கார் அல்லது இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: கால்நடை ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது 21 முதல் 50க்குள் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.43,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்க்காணல்

கால்நடை ஆலோசகர் பணிக்கான நேர்க்காணல் செப்டம்பர் 13 அன்று காலை 10 மணிக்கு நடைபெற இருக்கின்றது.எனவே இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் ரெஸ்யூம் மற்றும் முறையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற இருக்கின்ற நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

General Manager, Theni District Cooperative Milk Producer’s Union Ltd, Theni.

Previous articleபழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் நல்ல சம்பளத்தில் வேலை!! வாங்க விண்ணப்பிக்கலாம்!!
Next articleஎஸ்பிஐ வங்கியில் 6160 காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளே பண்ணுங்க நண்பர்களே!!