கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா!!! அப்போ சந்தனத்த இப்படி பயன்படுத்துங்க!!!
நமது கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை மறைய வைக்க சந்தனத்துடன் சில பொருட்களை சேர்த்து எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சந்தனம் நமது சருமத்திற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. சந்தனத்தை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனையும் குணமடைகின்றது. சந்தனத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. சந்தனத்தை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமத்தை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கின்றது. சரமத்தில் உள்ள இறந்த செல்களை சந்தனம் நீக்குகிறது.
சந்தனத்தை கடையில் வாங்கும் பொழுது அதன் தரத்தை பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். சந்தனத்தை முகப்பருக்களை மறையச் செய்யவும் பயன்படுத்தலாம். வறட்சியான சருமம் கொண்டவர்கள் சந்தனத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக சந்தன எண்ணெயை பயன்படுத்தலாம். தற்பொழுது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை மறைய வைக்க எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
அதற்கு தேவையான பொருட்கள்…
* சந்தன எண்ணெய்
* தேன்
* தேங்காய் எண்ணெய்
பயன்படுத்தும் முறை…
ஒரு பவுலில் தேவையான அளவு சந்தன எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மூன்றையும் நன்கு கலந்த பின்னர் கண்களுக்கு கீழ் கருவளையம் உள்ள பகுதியில் தேய்க்கவும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையத் தெடங்கும்.