மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!!

0
71
#image_title

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!!

நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ரிசர்வ் டே நாளான இன்று(செப்டம்பர்11) மாற்றப்பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரில் லீக் சுற்றுக்கள் முடிந்து தற்பொழுது சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகின்றது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், இரண்டாம் போட்டியில் இலங்கை அணியும் வென்றது. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டி நேற்று(செப்டம்பர்10) இலங்கையில் கொழும்புவில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களமிறிங்கி சிறப்பாக விளையாடினர். ரோஹித் சர்மா அரைசதம் அடித்து 56 ரன்களும் சுப்மான் கில் அரைசதம் அடித்து 58 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் விராட் கோஹ்லி அவர்களும், கே.எல் ராகுல் அவர்களும் களமிறங்கி பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரம் கழிந்து மழை நின்றுவிடும் என்று காத்திருந்தால் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மழை பெய்து கொண்டிருந்தது. பின்னர் மழை நிற்காததால் போட்டி ரிசரவ் டே நாளுக்கு மாற்றப்பட்டது.

அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டி ரிசர்வ் நாளான இன்று(செப்டம்பர்11) நடைபெறவுள்ளது. நேற்று(செப்டம்பர்10) இந்தியா 24.1 ஓவர்கள் ஆடிய நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. விராட் கோஹ்லி 8 ரன்களும், கே.எல் ராகுல் 17 ரன்களும் எடுத்துள்ளனர். ஷாகீன் அப்ரிடி, சதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.