சபரிமலைக்கு மாலை போட்ட பாதிரியார்!!! தேவாலய உரிமையை திருப்பி கொடுத்து தனக்கு எதிரான கருத்துகளுக்கு தக்க பதிலடி தந்துள்ளார்!!!

0
37
#image_title

சபரிமலைக்கு மாலை போட்ட பாதிரியார்!!! தேவாலய உரிமையை திருப்பி கொடுத்து தனக்கு எதிரான கருத்துகளுக்கு தக்க பதிலடி தந்துள்ளார்!!!

கேரளா மாநிலத்தில் பிரபல மலைக் கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் மாலை அணிந்துள்ளது போல இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதையடுத்து அவருக்கு எதிராக எழுந்த கருத்துகளுக்கு தேவாலய உரிமையை திருப்பி கொடுத்து பதிலடி கொடுத்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மென்பொருள் ஊழியரான மனோஜ் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியராக இருக்கின்றார். பாதிரியார் மனோஜ் அவர்களுக்கு தேவாலயத்தில் சேவை செய்ய திருச்சபையால் உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பாதிரியார் மனோஜ் அவர்கள் விரும்பினார்.

இதையடுத்து ஐயப்பன் கோவிலுக்கு செல்ல விரும்பி மாலை அணிந்து 41 நாட்கள் கடும் விரதம் மேற்கொண்டு வருகிறார். பாதிரியார் மனோஜ் அவர்கள் மாலை அணிந்தது பற்றி அறிந்த தேவாலய நிர்வாகம் அவர் மேல் தேவாலய விதிமுறைகள் மற்றும் கிறிஸ்துவ கோட்பாடுகள், விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து பாதிரியார் மனோஜ் அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தேவாலயத்தில் சேவை செய்வதற்கான உரிமையையும் அடையாள அட்டையையும் திருப்பி கொடுத்தார்.

இது குறித்து மனோஜ் அவர்கள் “என்னுடைய சபரிமலைப் பயணத்தால் நான் தேவாலயத்திற்கு எந்த சிரமமும் கொடுக்க விரும்பவில்லை. தேவாலயத்தின் நிலைப்பாட்டை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. நான் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்று என்னை நான் நம்புகின்றேன்.

என்னுடைய நோக்கம் கிறிஸ்துவ மதத்தை எவ்வளவு புரிந்து கொண்டேனோ அதே அளவிற்கு இந்து மதத்தையும் புரிந்து கொள்வது ஆகும். வரும் செப்டம்பர் 20ம் தேதி சபரிமலை பயணம் உறுதியாக செல்வேன். தேவாலயத்தில் சேவை செய்வதற்கான உரிமையை மட்டுமே திருப்பி கொடுத்துள்ளேன். ஆனால் பாதிரியராக என்னுடைய பணி தொடரும்” என்று கூறியுள்ளார்.

சபரிமலை பயணத்துக்கு செல்பவர்கள் அணியும் கருப்பு வேட்டியுடன் இருக்கும் பாதிரியார் மனோஜ் அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து பாதிரியார் மனோஜ் அவர்களுக்கு எதிராக பல கருத்துக்கள் எழுந்தது. இதற்கு பாதிரியார் மனோஜ் அவர்கள் “சாதி, மதம் ஆகியவற்றை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்றும் அனைவரையும் நேசிக்க வேண்டும் என்றும் கடவுள் கேட்டுக் கொண்டுள்ளார். மற்றவர்களை நேசிப்பது அவர்களின் செயல்களோடு நம்மை சேர்க்கின்றது. நான் கடவுளின் கோட்பாடுகளை முற்றிலும் பின்பற்றுகின்றேன்” என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.