வேற லெவலில் கம்பேக் கொடுக்கும் நோக்கியா நிறுவனம்!!! 11ஜிபி ரேம் ஸ்மார்ட் போனின் விலை இவ்வளவு தானா!!!
பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம் கம்பேக் கொடுக்கும் விதமாக மீண்டும் செல்போன் சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனான நோக்கியா ஜி 42 போனை மலிவான விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்பொழுது நோக்கியா நிறுவறம் அறிமுகப்படுத்தியுள்ள ஜி42 ஸ்மார்ட்போனில் 50 மெகா பிக்சல் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 11ஜிபி ரேம் மற்றும் பல வசதிகள் உள்ளது. நோக்கியா ஜி42 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
நோக்கியா ஜி42 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்…
* நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நேக்கியா ஜி42 ஸ்மார்ட்போன் 6.56 இன்ச்(720*1612 பிக்சல்கள்) கொண்ட ஹெச்.டி+ டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதி உள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு பாதுகாப்பு அம்சமாக கொரால்லா 3டி கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.
* நோக்கியா ஜி42 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 8 என்எம் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
* கேம் விளையாடும் வகையில் அட்ரினோ 619 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பிரியர்களுக்கு இந்த நோக்கியா ஜி42 ஸ்மார்ட்போன் மிகவும் பிடிக்கும்.
* நோக்கியா ஜி42 ஸ்மார்ட் போன் 6 ஜிபி ரேம் மற்றும் 5 ஜிபி விரிச்சுவல் ரேம் வசதியுடன் வருகின்றது. இதனால் மொத்தமாக 11 ஜிபி ரேம் வசதியுடன் 128 ஜிபி ரோம் மெமரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
* நோக்கிய் ஜி42 ஸ்மார்ட்போனில் 1 டிபி வரை மெமரியை நீட்டித்துக் கொள்ள மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹைபிரிட் டூயல் நானோ சிம் சிலாட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்ட் சிலாட் இந்த போனில் இடம் பெற்றுள்ளது.
* நோக்கியா ஜி42 ஸ்மார்ட்போனின் பேக் கேமரா எல்இடி பிளாஷ் லைட் வசதியுடன் டிரிபிள் ரியர் செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில் 50 மெகா பிக்சல் கொண்ட ஆட்டோ போக்கஸ் கேமரா நோக்கியா ஜி42 ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 மெகா பிக்சல் டெப்த் சென்சாரும் 2 மெகா பிக்சல் மைக்ரோ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
* நோக்கியா ஜி42 ஸ்மார்ட் போனில் உள்ள கேமராவில் நைட் மோட் 2.0, ஏ.ஐ போர்ட்ரய்ட், ஓ.ஜெட்.ஓ 3டி ஆடியோ கேப்சர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. செல்பி எடுப்பதற்கு என்று 8 மெகா பிக்சல் செல்பி கேமிரா வழங்கப்பட்டுள்ளது.
* நோக்கியா ஜி42 ஸ்மார்ட் போனில் 20வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சைட் மவுன்டட் பிங்கர் பிரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. 3.5 மி.மீ அளவு கொண்ட ஆடியோ ஜேக் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
* நோக்கியா ஜி42 ஸ்மார்ட்போனில் ஐபி52 தர டஸ்ட் மற்றும் ரெசிஸ்டன்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புளூடுத் 5.1, வை-பை 80, டைப் சி 2.0, ஜிபிஎஸ் ஆகிய கன்க்டிவிட்டி வசதிகளும் இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது.
* இந்தியாவில் இன்று(செப்டம்பர்11) அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா ஜி42 ஸ்மார்ட்போன் கிரே மற்றும் பர்பிள் ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த நோக்கியா ஜி42 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 15ம் தேதி அமேசான் தளத்தில் விற்பனையாகவுள்ளது.
* 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் கொண்ட நோக்கியா ஜி42 ஸ்மார்ட்போனின் விலை 12599 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.