கண்ணதாசனை பயங்கரமாக திட்டி வசமா மாட்டிக்கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் – வெளியான தகவல்!

0
99
#image_title

கண்ணதாசனை பயங்கரமாக திட்டி வசமா மாட்டிக்கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் – வெளியான தகவல்!

நாள் முழுக்க தூங்கி கொண்டே இருந்த கண்ணதாசன்!. கடுப்பில் கத்திய எம்.எஸ்.வி.. வந்ததோ சூப்பர் பாட்டு!..

தமிழ் சினிமாவில், பிரபல பாடலாசிரியரும், கவிஞராகவும் வலம் வந்தவர் கண்ணதாசன். அன்று முதல் இன்று வரை இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை இவர் எழுதியுள்ளார். இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தவர் கண்ணதாசன். 1980ம் ஆண்டே இவர் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். எத்தனை வருடங்கள் கழிந்தாலும் இன்று வரை இவருடைய பாடல்கள் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

1950-1960ம் ஆண்டுகளில் கொடி கட்டி பறந்த எம்.ஜி.ஆர், சிவாஜி உள்பட பல நடிகர்களுக்கும் இவர் பல பாடல்களை எழுதினார்.

அன்றைய காலத்தில் தமிழ் சினிமாவில் எம்.எஸ்.வியும், கண்ணதாசனும் ஒன்று சேர்ந்தால் அந்த படம் சூப்பர் ஹிட்டடிக்கும். இவர்கள் ஒன்று சேர்ந்து பணியாற்றிய பாடல்கள் இன்று கூட மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

தன்னுடைய நிஜ வாழ்க்கையை வைத்துதான் கண்ணதாசன் பல பாடல்களை வைத்துள்ளார். அதில் ஒன்று ஒருமுறை அவருடைய அண்ணனிடம் கண்ணதாசன் ரூ.5 ஆயிரம் கடனாக கேட்டுள்ளார். ஆனால், அவர் அண்ணன் கொடுக்கவில்லையாம். இதை மனதில் வைத்துக் கொண்டு, ‘பழனி’ படத்தில் ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ என்ற பாடலை எழுதினாராம்.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ஓர் ஆலயம் படத்திற்காக பாடலை உருவாக்க எம்.எஸ்.வியும், கண்ணதாசனும் பெங்களூருக்கு சென்று ஒரு ஓட்டலில் தங்கினர். அந்த அறையில் கண்ணதாசன் மது அருந்திவிட்டு கலைப்பில் நாள் முழுவதும் தூங்கியுள்ளாராம். இதை ஓரளவு எம்எஸ்வி பொறுத்துக்கொண்டு அமைதியாக இருந்தாலும். ஆனால்,மறுநாளும் அவர் எழுந்திருக்காமல் தூங்கிக்கொண்டே இருந்ததைப் பார்த்து எம்.எஸ்.வி கோபமடைந்துவிட்டாராம். உடனே ஒருவரை அழைத்து, கண்ணதாசனை யாராவது போய் எழுப்பி கூட்டி வாங்க… அப்படி அவர் வரவில்லையென்றால் உடனே நான் ஊருக்கு கிளம்பிவிடுவேன்… குடிக்கிறவன்கூட வந்தால் இப்படித்தான் நடக்கும் என்று கத்தினாராம். இவரை கத்தியதைக் கேட்டு கண்ணதாசன் சட்டென கதவு திறந்து வெளியே வந்தாராம். அங்கு இருந்தவர்களுக்கு ஒதே அதிர்ச்சியாகிவிட்டதாம். ‘சொன்னது நீதானா விசு?’ என்று கண்ணதாசன் கேட்டாராம். அதற்கு எம்எஸ் அது… வந்து… என்று விஸ்வநாதன் இழுத்துள்ளார். உடனே கண்ணதாசன் ‘சொன்னது நீதானா.. சொல் சொல் என் உயிரே’ என்று பாட்டு எழுதி அவர் கையில் கொடுத்தாராம்.