சமூக இடைவெளி கடைபிடிக்க சொல்லும் தமிழ் வெண்பா : அன்றே எழுதப்பட்ட ஆச்சர்ய தகவல்..!!

0
132

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும் என்பது பற்றி முற்காலத்திலேயே எழுதப்பட்ட வெண்பா பாடல் பற்றிய தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழர்கள் பண்பாட்டில் உள்ள அறுபது வருடங்களில் ஒன்றான விகாரி(கடந்த ஆண்டு) வருடம் பற்றி முற்காலத்திலேயே சொல்லப்பட்ட வருஷாதி வெண்பா பாடலில் தான் அவ்வாறு குறிப்பிட்ட பட்டுள்ளது. அந்த வெண்பா பாடல் பின்வருமாறு;

‘பாரவிகாரி தனிற் பாரண நீருங்குறையும்
மாரியில்லை வேளாண்மை மத்தியமாம்- சேரார்
பயம் அதியமுண்டாம் பழையோர்கள் சம்பாத்
தியவுடமை விற்றுண்பார் தேர்’.

இந்த பாடலின் விளக்கம்;

விகாரி வருடத்தில் மழை குறைவு ஏற்பட்டு குளம், கிணறு, ஆறு போன்றவை வற்ற தொடங்கும். இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறையும். விவசாய தொழில் திருப்திகரமாக இருக்காது. ‘நண்பர்களுடன் உறவு குறையும். மக்கள் ஒருவரோடு ஒருவர் பழகுவதில் சிக்கல் ஏற்பட்டு பயம் உண்டாகும்’. பண தட்டுப்பாடு காரணமாக நம் முன்னோர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் கரையும் சூழ்நிலை உருவாகும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடிவருவதால் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டித்தள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.

மேலே வழங்கப்பட்டுள்ள வெண்பா பாடலில் சொல்லப்பட்டது போல நம்மால் உறவினர்கள், நண்பர்களிடம் நட்பு குறைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து பழகுவதில் பயம் உண்டாகும் என்று கடந்த விகாரி ஆண்டை பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் பரவி அனைவரிடமும் பரவி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

Previous article22 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா தொற்று : பதற வைக்கும் பட்டியல்!
Next articleபுதுச்சேரி: கொரோனாவை கட்டுப்படுத்திய புதுவை அரசு! 5 பேருக்கு மட்டுமே சிகிச்சை! கைதட்டி வழியனுப்பிய மகிழ்ச்சி சம்பவம்.!!