உதயநிதி தலைக்கு விலை வைத்த சாமியாருக்கு அண்ணாமலை கடும் கண்டனம்
சனாதானத்தை பின்பற்றுவதாக கூறிக் கொண்டு ஒருவரின் தலைக்கு விலை நிர்ணயம் செய்பவர் போலி சாமியாராகவே இருக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவிப்பது நல்லதுதான். அப்போதுதான் பாஜக வளரும் என்று தெரிவித்தார். கருணாநிதி இருந்தால் எதிர்ப்புகளை சரியாக கையாள்வார். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தமாட்டார் என்றும் பாஜக தனித்துவத்தை தாண்டி, உதயநிதியால் அதிகளவில் வளர்ச்சி அடையும். இதை நாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பீர்கள் என்று அண்ணாமலை சூழுரைத்தார்.
வடமாநிலத்தில் சாமியார் ஒருவர்
அமைச்சர் உதயநிதி தலைக்கு பரிசுத் தொகை அறிவித்தது தவறு என்று கருத்து தெரிவித்த அண்ணாமலை அவர்கள், ஒருவரின் தலைக்கு பரிசுத் தொகை நிர்ணயம் செய்பவர் சனாதனத்தை பின்பற்றவில்லை என்பதே அர்த்தம் என்று கூறினார்.
சனாதானத்தை பின்பற்றுவதாக
கூறிக்கொள்பவர் ஒருவரின் தலைக்கு விலை வைப்பேன் என்றால், அவர் ஒரு போலி சாமியாராகத்தான் இருக்க வேண்டும் என்றும் இது வன்மையாக கண்டிக்கக்கூடியது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவாகவும் சாமியாருக்கு எதிராக பேசியிருப்பது தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை அவர்கள் திமுகவுக்கு ஆதரவாகவும் தற்போது திமுக செய்து வரும் செயல்களுக்கு அமைதி காத்து வருவதுமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.